சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் கல்கண்டு வார இதழில், ரவீந்தர் அவர்கள் நிறைய தொடர்கதைகள் எழுதி வந்தார்.
அப்போது கல்கண்டு இதழில் தொடர்கதைகள் எழுதியவர்கள்:
ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ஆர்னிகா நாசர்,
ஜேடிஆர் போன்றவர்கள்.
தொடர் கதைகள் பொங்கல் சிறப்பிதழில் ஆரம்பமானால், சித்திரை சிறப்பிதழ் முதல் வாரம் முடிந்து விடும்.
சித்திரை சிறப்பிதழில் ஆரம்பமாகும் தொடர்கதை,
சுதந்திர தின சிறப்பிதழுக்கு முன் வாரம் முடிந்து விடும்.
சுதந்திர தின சிறப்பிதழில் ஆரம்பம் ஆகும் தொடர்கதைகள், சில வாரங்களிலேயே தீபாவளிக்கு முந்தின வாரம் முடிந்துவிடும்.
தீபாவளிச் சிறப்பிதழில் ஆரம்பமாகும் தொடர் கதைகள், பொங்கல் சிறப்பிதழுக்கு முந்தின வாரம் முடிந்து விடும்.
ஜே டி ஆர் மற்றும் ரவீந்தர் ஆகியோர் இப்போது எழுத காணோம்.
கல்கண்டில் மருத்துவ கட்டுரைகளை அன்புதாசன் எழுதி வந்தார். நாட்டு நடப்புகளை நா. தேவாம்சம் எழுதி வந்தார்.
வாசகர்களும் இரு பக்க துணுக்குத் தொகுப்புகளை எழுதி வந்தனர்.
ஒருபக்கக் கட்டுரைகளை லேனா தமிழ்வாணன் எழுதி வந்தார். இரு தொடர்கதைகளும் எழுதினார்.
வெளிநாட்டு பயண கட்டுரைகளும் எழுதினார்.
-அ.முஹம்மது நிஜாமுதீன்.
#கல்கண்டு நினைவுகள்!
#உலக புத்தக தினம்
2 comments:
மலரும் நினைவுகள் மகிழ்ச்சி
தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தமைக்கு நன்றிகள்!
Post a Comment