...பல்சுவை பக்கம்!

.

Tuesday, September 26, 2023

தினந்தோறும் இலவச நாளிதழ்! #182

தினந்தோறும் இலவச நாளிதழ்! #182




ஹாங்காங்-கில் தினசரி காலையில் நடைபாதையில் செல்லும்போது இலவச நாளிதழ்களை வழங்குவார்கள்.
[ஆங்கிலத்தில் 2 மற்றும் சைனீஸ் 2.]

சென்ற வாரம் எனக்குக் கிடைத்தவை:
20/09ஆம் தேதி 32 பக்கங்கள்,
21/09ஆம் தேதி 36 பக்கங்கள்!

ஞாயிறு அன்று வெளிவரும் இந்து தமிழ் திசையின் 'பெண் இன்று' இணைப்புப் பத்திரிகையின் அந்த அளவு! Tabloid.

நடுவிலே திடமான ஸ்டாப்ளர் ப்பின்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகப் பக்கங்கள்.

22/09/2023 வெள்ளிக்கிழமை 88 பக்கங்கள்.

விளம்பரங்களும் உண்டு. 
தகவல்களும் உண்டு.
ஓவியர் வரையும் விஐபிகளின் ஓவியங்களும் உண்டு.

நமது ஊரில் இப்படியான பத்திரிகைகள் வார இதழாக வந்தால், ரூபாய் 25க்கு விற்கலாம்.

தினசரி நாளிதழாக வெளியிட்டால் 
5 ரூபாய் அல்லது 
6 ரூபாய் என்று விலை இருக்கலாம்.

அந்த நாட்டில் தினமும் முற்றிலும் இலவசம்!!!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன் 
*

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

13 comments:

kaleel ahamad said...

கொடுத்து வைத்தவர்கள் பாய், அங்கு வசிப்பவர்கள் 😁

அ.முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Kaleel Ahamed பாய்!

தினமும் வாங்கிக் கொள்பவர்கள் அவர்கள்!!!

அ.முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Kaleel Ahamed பாய்!

தினமும் வாங்கிக் கொள்பவர்கள் அவர்கள்!!!

KILLERGEE Devakottai said...

தகவல்கள் சிறப்பு நண்பரே

அ.முஹம்மது நிஜாமுத்தீன். said...

@KILLERGEE Devakottai...

மகிழ்ச்சி + நன்றி நண்பரே!

கல்விக்கோயில் said...

அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இது போன்ற நாளிதழ்கள் இலவசமாக உணவகங்களில் வைக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எந்த இதழையும் எடுத்துச் செல்லலாம்

கரந்தை ஜெயக்குமார் said...

வியப்பு

Anonymous said...

ஆச்சரியமான தகவல்.

கீதா

அ.முஹம்மது நிஜாமுத்தீன். said...

ஓ, அப்படியா!!!
தகவலுக்கு நன்றி சார்!
@கல்விக்கோயில்

அ.முஹம்மது நிஜாமுத்தீன். said...

கருத்தளித்தமைக்கு நன்றி சார்!
@கரந்தை ஜெயக்குமார்

அ.முஹம்மது நிஜாமுத்தீன். said...

@கீதா மேடம்!
வருகை தந்து கருத்து தந்தமைக்கு நன்றி!

koilpillai said...

இங்கும் (இங்கிலாந்தில்) சிலபத்திரிக்கைகள் இலவசமே , பேருந்துகள், மெட்ரோ, போன்றவற்றிலும் சாலை ஓரங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் தேவைபடுவோர் எடுத்து செல்லலாம். சில நேரங்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எடுத்து செல்வதையும் பார்த்திருக்கிறேன். என்ன நோக்கமாக இருக்கும்? வீட்டிலுள்ள சமையால் அரை அலமாரிகளில் விரித்து வைக்க இருக்குமோ.?

தகவலுக்கு நன்றி.

கோ.

koilpillai said...

இங்கும் (இங்கிலாந்தில்) சிலபத்திரிக்கைகள் இலவசமே , பேருந்துகள், மெட்ரோ, போன்றவற்றிலும் சாலை ஓரங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் தேவைபடுவோர் எடுத்து செல்லலாம். சில நேரங்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எடுத்து செல்வதையும் பார்த்திருக்கிறேன். என்ன நோக்கமாக இருக்கும்? வீட்டிலுள்ள சமையால் அரை அலமாரிகளில் விரித்து வைக்க இருக்குமோ.?

தகவலுக்கு நன்றி.

கோ.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...