...பல்சுவை பக்கம்!

.

Monday, April 14, 2025

தாய்லாந்தில் சொங்ரான் பண்டிகை - தமிழ்நாடு இ-பேப்பர். #184


தாய்லாந்தில் சொங்ரான் பண்டிகை - தமிழ்நாடு இ-பேப்பர். #184

தாய்லாந்தில் கொண்டாடப்படும் 
'சொங்ரான்' பண்டிகை பற்றி நான் தொகுத்து எழுதிய கட்டுரை தமிழ்நாடு இ பேப்பரில் 13/04/2025 அன்று வெளியானது.

 

தாய்லாந்தின் 'சோங்க்ரான்' பண்டிகை!

 'சோங்க்ரான்' என்பது  தாய்லாந்தில் மிக முக்கியமான,  பிரபலமான பண்டிகை ஆகும். புத்த மத நாட்காட்டியில் ஒரு முக்கியமான நிகழ்வான இந்த நீர் விழா, பாரம்பரிய தாய் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதி கொண்டாடப்படுகிறது. 'சோங்க்ரான்' என்ற பெயரானது, 'கடந்து செல்வது' அல்லது 'நெருங்கி வருவது' என்று பொருள்படும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்ததாகும்.

தாய் புத்தாண்டான  சோங்க்ரான் திருவிழா, (சோங்க்ரான் ஸ்ப்ளெண்டர்ஸ்      என்பது) தாய்லாந்து நாட்டின் தேசிய விடுமுறை தினம் ஆகும்.  சோங்க்ரான் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 13 அன்று கொண்டாடப்படுகிறது! இருப்பினும் விடுமுறைக் காலம் ஏப்ரல் 14 அல்லது 15 வரை நீடிக்கும். ஒரு சில ஆண்டுகளில் வாரம் முழுவதும் 7 அல்லது 9 நாட்கள் கூட இப்பண்டிகை கொண்டாடப்படுவதுண்டு!
2024 ஆம் ஆண்டில், 
3 நாள் விடுமுறைக்குப் பதிலாக ஏப்ரல் முதல் தேதி தொடங்கி இருபத்தியோராம் தேதி வரை 'சோங்க்ரான்' கிட்டத்தட்ட முழு மாதத்திற்கும் கொண்டாடப்பட்டது. 

பௌத்த நாள்காட்டியின் படி இந்த தாய் புத்தாண்டு,  தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் பல நாட்காட்டிகளின் புத்தாண்டுகளுடனும் தமிழ் புத்தாண்டு, விஷு, பிஹு, போஹேலா போய்சாக், பான சங்கராந்தி, வைசாகி போன்ற இந்து நாட்காட்டியின் புத்தாண்டுகளுடனும் ஒத்துப்போகிறது.  சீனா (யுன்னான் மாகாணத்தின் டாய் மக்கள்), இந்தியா, லாவோஸ், கம்போடியா, மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற தெற்காசியாவின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அதே நேரத்தில் இந்தத் தாய்லாந்து நாட்டுப் புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன், நீடூர்.

அதே இதழில் 14/04/2025 அன்று இந்த தொகுப்புக் கட்டுரை பற்றி வந்த வாசகர் விமர்சன கடிதங்கள் :

1. 


2. 


3.




 
4.


5.




நன்றி:
tamilnadu e-paper.


https://epaper.tamilnaduepaper.com

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

1 comment:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...