பயணங்கள் முடிவதில்லை!
பஸ்ஸில் காலேஜுக்குச் செல்லும்போது
மாணவர்கள் (சிலர்) செய்யும் லூட்டிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
சில மாணவர்கள் டிக்கெட்டே எடுக்க
மாட்டார்கள். அது அவர்களுக்கு
பெருமை. டிக்கெட் பரிசோதகர் வந்தாலும்
எப்படி அவர்களிடமிருந்தும் தப்பிக்கிறார்கள்
என்பது மிகவும் புரியாத புதிர்.
நான் செல்லும் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத
மாணவர்களை, கண்டக்டருக்குத் தெரியும்.
கேட்டால் 'முன்னாடி எடுக்கிறாங்க' என்றோ
'பின்னாடி எடுக்கிறாங்க' என்றோ சொல்வார்கள்;
ஆனால் யாரும் எடுப்பதில்லை.
அதனால், கண்டக்டர் டிக்கெட் எடுக்காத
மாணவனிடமே போய், "பாருங்க தம்பி
இதுங்க பண்ற அநியாயத்தை. அப்பா,
அம்மா நல்லபடியா வளத்தா இப்படிச்
செய்யுங்களா இதுங்க? டிக்கெட்டே எடுக்க
மாட்டேங்குதுங்க இந்த சனியன்கள்.
இதுங்களுக்கு நல்ல சாவே வராது.
சோத்ததான் திங்குதுங்களா இல்லாட்டி
வேற எந்த எழவத்தான் திங்குதுங்களோ,
நாசமா போவப் போவுதுங்க. நம்ம
வேலைக்கில்ல ஒல வச்சிரும் இதுங்க"
என்பார்.
அதற்கு அந்த மாணவனும் "இந்த
சனியனுங்க திருந்த மாட்டானுங்க.
என்னை மாதிரிலாம் யாருங்க ஒழுங்கா
டிக்கெட் எடுக்கிறான்கள்?" என்று
நல்லவனாக வேஷம் போடுவான்.
ஒரு தடவை பஸ்ஸின் பின் படிக்கட்டில் சுமார்
10 அல்லது 15 பேர்கள் தொங்கிக் கொண்டு
வருகிறார்கள். கண்டக்டர் டிக்கெட் வாங்கச்
சொல்லி கத்தியும் பிரயோசனம் இல்லை.
கடைசியில், "படியில எத்தினி டிக்கெட்டுப்பா?"
என்று கேட்டார். "ஒரு ஆளுக்கு ஒன்னுதான்
சார்" என்றான் ஒரு மாணவன். மாணவர்கள்
சிரித்தார்கள்.ஆனால் டிக்கெட் மட்டும்
வாங்கியபாடில்லை. கண்டக்டர்தான் பாவம்
வேற ஆளுக்கு டிக்கெட் போட போய்
விட்டார்.
ஒருநாள்.
பஸ் புறப்பட்டு, மயிலாடுதுறை பஸ்
ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து
விட்டது. அப்போது மூன்று மாணவர்கள்
ஓடி வந்து ப்ஸ்ஸின் பின் படிக்கட்டு வழியாக
ஏறி மேலே வந்து, உள்ளே வராமல் அங்கேயே
நின்று கொண்டார்கள்.
கண்டக்டர் அருகிலேயே டிக்கெட் போட்டுக்
கொண்டிருந்தாலும் அந்த மூவரும் டிக்கெட்
வாங்கவில்லை.
டிக்கெட் போட்டுக் கொண்டே டிரைவரின்
அருகேவரை சென்று விட்டார் கண்டக்டர்.
அப்போது பொதுவாக எல்லோரையும் பார்த்து,
"சீட்டு வேணுமா, வேற யாருக்காவது சீட்டு
வேணுமா?" என்று கேட்டார்.
அந்த மூன்று மாணவர்களில் ஒருவன்,
"சார், இங்கே வாங்க!" என்று கூப்பிட்டான்.
கண்டக்டர் அருகே சென்றார். "எத்தனை
சீட்டு வேணும்ப்பா?" என்றபடியே பயணச்சீட்டைக்
கிழிக்கப்போனார்.
அதற்கு, "எங்கே சீட்டு? கால் வலிக்கிது,
உட்காரணும். எங்கே சீட்?" (seat) என்று
கேட்டான் அந்த மாணவன்.
கண்டக்டர் வெறுத்துப் போய் தலையில்
அடித்துக் கொண்டார். ஆனால் மாணவர்களுக்கோ
சிரிப்புதான்.
பஸ் வரும்; பஸ் ஸ்டாப் வரும்.
பயணிகள் வருவர்; இறங்குவர்.
ஆனால், அந்த கண்டக்டர்கள், டிரைவர்கள்
மற்றும் பஸ்ஸின் பயணங்கள் முடிவதேயில்லை.
ஆகவே, ஓட்டுனர், நடத்துனரை மதிப்போம்.
குறிப்பு: ஒரு சில மாணவர்களைப் பற்றி
மட்டும்தான் இந்தக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளேன்; அனைவரையும் அல்ல.
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
16 comments:
பயணங்கள் முடிவதில்லை. ஆம். சில மாணவர்கள் இந்த மாதிரி செய்கைகள் ஆண்மை என்ற நினைத்துச் செய்கின்றனர். எது சரி, தவறு என்று புரிவதில்லை. மூக்கணாங்கயிறு மாட்டும் வரை கன்றுகுட்டி துள்ளிக் குதித்துக் கொண்டு இருக்கும்... அது மாதிரிதான் இதுவும்.
இராக்வன் (நைஜீரீயா)!
சரியான உதாரணம் சொன்னீர்கள்!
கன்றுக்குட்டி என்பது ஐந்தறிவு கொண்ட
மாக்கள் இனம். நாமோ ஆறறிவு கொண்ட
மக்கள் அல்லவா?
ஆகவே நாம், திருந்திக் கொள்ள வேண்டும்
என்ற நோக்கத்தின்பொருட்டே இந்த இடுகை!
கருத்திற்கு நன்றி!
மாணவப் பருவம் இப்படித்தான் போல
மாணவர்களின் சிலசெயல்கள் கண்டிக்கத்தக்கவை சிலசெயல்கள் ரசிக்கத்தக்கவை
//நாம், திருந்திக் கொள்ள வேண்டும்
என்ற நோக்கத்தின்பொருட்டே இந்த இடுகை//
நல்ல எண்ணம் நிஜாமண்ணா பாராட்டுக்கள்
//மாணவப் பருவம் இப்படித்தான் போல//
வானம்பாடி(கள்)!
வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றிகள்!
மாணவப் பருவத்தில் இப்படித்தான் சிலபேர்;
பலர் 'அப்படி'யும் உண்டல்லவா?
இந்த மாணவப் பருவம்தான் எதிர்கால
ஏற்றமிகு வாழ்வுக்கு அடிப்படை.
அடிக்கடி வந்து தங்கள் கருத்துக்களைத்
தாருங்கள் வானம்பாடி(கள்).
கவிஞர் மலிக்கா!
//நல்ல எண்ணம் நிஜாமண்ணா பாராட்டுக்கள்//
நல்ல எண்ணமுடன் பாராட்டியமைக்கு நன்றிகள்!
நன்றாக இருக்கிறது. படியில் பயணம் செய்வது விளையாட்டு, வினை ஆகும் வரை.
பயனுள்ள பதிவு நண்பரே..
சென்னையில் ஒருநாள் காலை பேருந்து ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டு சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர், கம்பி உடைந்து சாலையில் விழுந்தனர். ஒருவர் இறந்தார். இன்னொருவருக்கு முதுகெலும்பு உடைந்தது. ஆனால், அடுத்த நாள், அதே வழித்தடத்தில் மாணவர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு தான் சென்றனர்...
வாங்க பின்னோக்கி!
படியில் பயணம் செய்வது விளையாட்டு
அல்ல; வினை மட்டும்தான்.
தங்கள் கருத்திற்கு நன்றி!
முதல் வருகை பிரேம்குமார் அசோகன்!
வருகைக்கு நன்றி!
//பயனுள்ள பதிவு நண்பரே..//
பாராட்டியதற்கும் தாங்கள் கண்ட
நிகழ்வினை எடுத்து விளக்கி
எச்சரித்ததற்கும் நன்றி!
nijam
neenga eluthuvathu nalla irukku
ungalukku entha ooru?
enakku kiliyanur than
appuram tamilil eppadi karuthu type pannuvathunnu sollungalen
நன்றி ஹாஜா!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
தங்களுக்கு கிளியனூர் என அறிய மகிழ்ச்சி!
இப்போது எந்த நாட்டில், ஊரில்
இருக்கிறீர்கள்?
தமிழ் டைப் செய்வது ஈஸிதான்.
எனக்கு மெயில் செய்யுங்கள் அல்லது
பின்னூட்டத்தில் தங்கள் மெயில் ஐடி.
தாருங்கள். அதில் விளக்குகிறேன்.
thanks nizam
nan tharpothu saudiyil al khobaril irukkiren
en id princehaja@gmail.com
ஹாஜா,
தங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.
ஓக்கேவா?
கல்லூரி வயதின் குறும்புகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.. அடுத்தவர்களை பாதிக்காத வரை.. நன்றி..!
//பிரசன்னா said...
கல்லூரி வயதின் குறும்புகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.. அடுத்தவர்களை பாதிக்காத வரை.. நன்றி..!//
சரியான கருத்து!
நன்றி பிரசன்னா!
Post a Comment