நகைச்சுவை; இரசித்தவை - 2
மறுபடியும் மறுபடியும் தோசையா...?
சாப்பிட வந்தவர்: "என்னப்பா சர்வர், நான் 'தோசை கொண்டுவா'ன்னுதானே சொன்னேன்? ஆனால் நீ தோசை, மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தோசைனு கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறாயே?"
சர்வர்: "நீங்கதானே சார் 'சுட, சுட தோசை கொண்டுவா'ன்னீங்க? அதனால்தான் சரக்கு மாஸ்டர் தோசையை சுட, சுட, நான் கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறேன்."
சாப்பிட வந்தவர்: "!?!?!?"
**********************************************************
கால் வலி
நோயாளி: "டாக்டர், வலது கால் இரண்டு நாளாக வலிக்கிறது டாக்டர்"
டாக்டர்: "வயசாயிடுச்சில்லையா? அப்படித்தான் வலிக்கும்!"
நோயாளி: "இடது காலுக்கும் அதே வயசுதானே டாக்டர் ஆகுது? ஆனால் இடது கால் வலிக்கலையே டாக்டர்?"
டாக்டர்: "!? !? !?"
=============================================
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
************************************************************
தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்=========>>
10 comments:
திரும்பவும் சொல்றேன் தாங்கமுடியலடா சாமி... அதான் அந்த தோசை ஜோக்கத்தான் சொல்றேன்.
எங்களுக்கும் சுட சுட ஜோக் வேணுங்க... கொஞ்ச நேரம் எங்களை மறந்து சிரிச்சாத்தான் இந்த ஆபிஸ் டென்ஷன் குறையும்.
அந்த சுட்ட தோசை ஜோக் சுட்டதா... நல்லாயிருந்தது!
வாங்க இராகவன்!
//திரும்பவும் சொல்றேன் தாங்கமுடியலடா சாமி... //
//எங்களுக்கும் சுட சுட ஜோக் வேணுங்க... //
ஜோக் வேணுங்கிறீங்களா? வோணான்றீங்களா?
அப்புறம் கமெண்ட் அளித்ததற்கும் மறுபடியும்
கமெண்ட் அளித்ததற்கும் நன்றி... மறுபடியும்
நன்றி.
(கமெண்ட், மறுபடியும் கமெண்ட்,
மறுபடியும் மறுபடியும் கமெண்ட் என்று
போடாமல் விட்டீங்களே...!)
வந்து, கருத்து தந்தமைக்கு நன்றி பேரு முருகேஷ் பாபு.
//அந்த சுட்ட தோசை ஜோக் சுட்டதா... நல்லாயிருந்தது//
அந்த ஜோக் நானே சுட்டதுதான். (தலைப்பிலேயே
'இரசித்தவை' இருக்கே, ஆகவே அவை நான்
'படைத்தவை' அல்ல)
அப்புறம் உங்களுக்கு வித்தியாசமான 'பேரு'
கப்பலுக்கு போன மச்சன் பாடலை எனக்கு mail பண்ண முடியுமா mp3 shafiullah76@gmail.com
very nice
//கப்பலுக்கு போன மச்சான் பாடலை எனக்கு mail பண்ண முடியுமா //
அனுப்பி விட்டேன் shabi!
surya! thank you very much.
Post a Comment