...பல்சுவை பக்கம்!

.

Sunday, September 13, 2009

கப்பலுக்குப் போன மச்சான்!



'கப்பலுக்குப் போன மச்சான்!'
சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு
முன் தமிழ் நாடெங்கும் பிரபலமான
பாடல்.மேலும் அரபு நாடுகளில் வாழ்ந்த
தமிழர்களிடையவும் மனங்கவர்ந்த
பாடல்.

தொலைபேசி பிரபலமாகாத, அலைபேசி
அறிமுகமாகாத அக்காலத்தில் இப்பாடலில்
வரும் ஆண் குரலிலும் பெண் குரலிலும்
தங்களையே கண்டனர் பல இளம்தம்பதிகள்.

(இப்பாடலைப் பாடிய காயல் ஏ.ஆர்.ஷேக்
முஹம்மது அவர்கள் கடந்த ஜூன் 9ஆம்
நாளன்று காலமானார்.)

இப்பாடலின் வரி வடிவம் இதோ:

பெண்:
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
எப்பத்தான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் - நான்
இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

ஆண்:
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்

பெண்:
அக்கரைக்குப் போனதுமே அக்கறையும் போயிடுச்சோ
அன்று சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களும் மாறிடுச்சோ
சர்க்கரைமேல் கோபப்பட்டு கட்டெறும்பும் ஓடிடுச்சோ
சங்கதி தெரியலையே மன்னன் மனம் வாடிடுச்சோ
(கப்பலுக்குப் போன...)

ஆண்:
அன்னமே அடிக்கரும்பே ஆவல் என்னை மீறுதடி (2)
எண்ணெய்க் கிணறுபோலே எண்ணமாய் ஊறுதடி
உன்னை அங்கு விட்டுவந்து உள்மனசு வாடுதடி
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கே வாழுதடி (2)
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துபாய்க்கு பயணம்போயி வருஷம் ஆறாச்சு
துள்ளிவரும் காவிரிபோல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நானிங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்திடுங்க தக்கதுணை நானாச்சு

ஆண்:
பாலைநிலமெல்லாமே சோலைவனமாகுதடி
பாயிறது நீராக மச்சானின் வேர்வையடி
பாடுபட்டு சேர்க்குறது பைங்கிளியே ஏதுக்கடி
பாவை உனக்கல்லாமே பாரிலே யாருக்கடி
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துல்ஹஜ்ஜு மாசத்திலே கடிதம் ஒன்னு போட்டீங்க
நலமா சுகமான்னு பாசம்வச்சி கேட்டீங்க
இங்கெனக்கு என்ன குறை மாடிமனை பஞ்சமில்ல
இருக்குறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்ல


ஆண்:
ஈச்சமரத் தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாசத்திலே தீர்ந்துவிடும் ஒப்பந்தமே
ஆச்சுது ஒருவாறு அன்புநகைப் பெட்டகமே
ஆக்கப்பொறுத்தவளே ஆறப்பொறு ரத்தினமே (2)

கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன் நான் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன்....

பாடியவர்கள்: காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது & ஜெயபாரதி.
பாடலாசிரியர்: கவிஞர் நாகூர் சலீம்.

இந்தப் பாடலை யூடியூபில் கேட்க:
https://www.youtube.com/watch?v=7vTI_YyRjHc

இந்தப் பாடலை யூடியூபில் பார்க்க:
https://www.youtube.com/watch?v=_aqcRXO-FXE

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

18 comments:

கிளியனூர் இஸ்மத் said...

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....நன்றி நிஜாம்...

Rifaj Aslam said...

Dear nijam can you post us the audio format of this song or....... post the youtube link as i dont know this song but the lyrics are super pls............................... old is gold

தங்கராசு நாகேந்திரன் said...

யப்பாடி
ஆறு வருசமா போகாம இருந்துருக்காரு

காயல் சேக் முகமது தானே ஈச்சமரத்து இன்ப சோலையில் படித்தவர்

நல்ல பதிவுங்க.

malar said...

ஆம் !

நான் சிறு வயதில் கேட்டதுண்டு .நல்ல நினை வூட்டல்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....நன்றி நிஜாம்...//

-நன்றி கூறிய கிளியனூர் இஸ்மத்!
என் நெஞ்சின் நன்றிகள் உங்களுக்கு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//காயல் சேக் முகமது தானே ஈச்சமரத்து இன்ப சோலையில் படித்தவர்//

-தங்கராசு ராஜேந்திரன்! அவரேதான்!
பல திரை இசைப் பாடல்களும்
பாடியிருக்கிறார்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நான் சிறு வயதில் கேட்டதுண்டு .நல்ல நினை வூட்டல்//

-மலர்!

நானும் சிறுவயதில் கேட்டதை
இப்போது நினைவூட்டிக் கொண்டேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//can you post us the audio format of this song //

Rifaj Aslam,

I have this song in mp3 audio formate olly.
If u give yr email, i will send u.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//can you post us the audio format of this song //

Rifaj Aslam,

I have this song in mp3 audio formate only.
If u give yr email, i will send u.

அன்புடன் மலிக்கா said...

அழகான பாடல்
அதை நினைவுக்கு கொண்டுவந்தைமைக்கு நன்றி
சகோதரரே

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அழகான பாடல்
அதை நினைவுக்கு கொண்டுவந்தைமைக்கு நன்றி
சகோதரரே//

-நன்றி கவிஞர் மலிக்கா.

வலைப்பூவுக்கு தொடர்ந்து
இரசிக்க வருக, வருக!

shabi said...

எனக்கும் இப் பாடலின் mp3 mail பண்ண முடியுமா shafiullah76@gmail.com

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

shabi,

நீங்கள் கேட்ட பாடல்,
அனுப்பியுள்ளேன்.

மாயவரத்தான் said...

எனக்கு?!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//மாயவரத்தான்.... said...
எனக்கு?!//

ஐயா மாயவரத்தான்...
இதோ உங்களுக்கும் அனுப்பிடறேன்.

Anonymous said...

paadal azukaiyai vara vaiththathu.

Anonymous said...

I need the song at Mp3 format

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Anonymous said...
I need the song at Mp3 format//

Dear friend,
I will send it, after u inform me
ur name and ur mail i.d. (Insha
Allaah)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...