அன்பு : அம்மா + அப்பா
ஆர்வம் : நூல்கள் படிப்பதில்
இன்பம் : இறைவனது அற்புதங்களை இரசிப்பதில்
ஈகை : தேவையுடையோருக்குத் தகுந்த
சமயத்தில் உதவுதல்
உயர்வு : முயற்சியுள்ளவரையில் உயர்வு உண்டு
ஊக்கம் : அரிய செயல்களைப் புரிய
மற்றவர்களுக்கு நாம் கொடுப்பது
எண்ணம் : அனைவரும் இன்புற வேண்டும்
ஏன் இந்தப்
பதிவு? : சுட்டீஸ் லாஃபிரா அழைத்ததால்
ஐயம் : நம்பியபின் ஐயம் ஏன்?
ஒற்றுமை : சண்டைகள், பிரிவுகள், வேறுபாடுகள்
களைந்தால் வருவது
ஓட்டம் : எதிலும் 'ஓட்டம்' நன்றாயிருந்தால்
எதுவும் நன்றாய் 'நடக்கும்'
ஔடதம் : மனதார சிரித்து மகிழ்வது
அஃது : என் பேனா: நண்பன்
இதில் கை கோர்க்க அழைக்கிறேன்; அபி அப்பா, கிருஷ்ணா.
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>
10 comments:
நல்லா எழுது இருக்கின்றிங்க....அருமை...சிறப்பு.
entha school teacher neenga? super
என் வலைப்பூவை இரசிக்க இணைந்துள்ள
கிருஷ்ணா, வருக, வருக!
நான் எந்த ஸ்கூல் டீச்சரும் இல்ல!
ஒருவேளை நீங்க...?
//இன்பம் : இறைவனது அற்புதங்களை இரசிப்பதில்//
அருமை!
//ஊக்கம் : அரிய செயல்களைப் புரிய
மற்றவர்களுக்கு நாம் கொடுப்பது//
நிஜமான நிஜம், உங்கள் விஷயத்தில்...
//அருமை!//
அப்ப நல்லா இரசிச்சீங்கள்? ஓகே, ஓகே!
நன்றி நீடூர் நிஜாம்!!!! நம்ம ஊர் பையனாச்சே எழுதிட்டா போச்சு!!
அபி அப்பா!
கை கோ(சே)ர்க்க வந்தமைக்கு நன்றி!
//நல்லா....//
//அருமை...//
//சிறப்பு.//
-மிக மிக மிக நன்றி கீதா ஆச்சல் அவர்களே!
நீ ஒரு "அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஃ”
http://nidurseasons.blogspot.in/2012/11/blog-post_8677.html
ஔடதம் (மருந்து)
அதிகமாக ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்க விரும்பவில்லை.
ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்துவிட்டதால் இறைவனுக்கு வேலையில்லை.
இறைவனை நம்பி வேலையை தொடர்வதே உயர்வு.
ஈ காட்டி ஈனத் தொழில் செய்யாமல் இருக்க விரும்பு
உயர்ந்தபின் உதவியவரை உதறிவிடாதே.
ஊசல் மனது ஒரு வேலையும் செய்யாது.
எளிய வாழ்வு எக்காலமும் மகிழ்வு தரும்.
ஏற்றம் வரும்போது எளிமை வேண்டும்
ஐயம் வர ஆசிரியரை நாடி விளக்கம் கேள்
"ஒட்டகத்தை கட்டிவிட்டு,அதன் பாதுகாப்புக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்"
{ஒட்டகத்தை கட்டாமல்,அது பாட்டுக்கு விட்டு விட்டு,இறைவன் பாத்துக் கொள்வான் என்று இருந்து விடக் கூடாது என்று நபி அவர்கள் வலியுறுத்தினார்கள்.)
Post a Comment