...பல்சுவை பக்கம்!

.

Saturday, September 26, 2009

இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!




இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!

ஒரு மாலை நேரம். ஆஃபீஸிலிருந்து கணவன் தனது
மனைவிக்கு ஃபோன் செய்து, "நீ செய்கிற மெதுவடை
சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும். இன்னும் ஒரு மணி
நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மெதுவடைகள்
செய்துவை" என்றான். மனைவி "சரி" என்றாள்.

அதுபோலவே ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்த கணவன், மனைவியிடம் "மெதுவடை எல்லாத்தையும் எடுத்து வா" என்றான். மனைவி ஒரு தட்டில் ஒரு மெதுவடையும் சட்னியும் கொண்டுவந்து கணவனிடம் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்து அதிர்ச்சியான கணவன், "என்னடி, ஒரு வடைதான் இருக்கு.மற்றதெல்லாம் எங்கே?" என்று கேட்டான்.

அதற்கு மனைவி , "முதலில் ரெண்டு வடை சுட்டேன்.
நல்லாயிருக்கான்ன சாப்பிட்டுப் பார்த்தேன்.
அப்புறம் ரெண்டு வடை சுட்டேன். நல்லாயிருக்கான்னு
சாப்பிட்டுப் பார்த்தேன். அப்புறம் ரெண்டு வடை சுட்டேன்.
அதையும் சாப்பிட்டு விட்டேன். இப்படி எல்லா
வடையையும் சாப்பிட்டுவிட்டு இந்த ஒரு வடையை
மட்டும் உங்களுக்காக ஆசையோட எடுத்து வச்சிருக்கேன்" என்றாள்.

அந்தக் கணவன், "அடப்பாவி! எப்படி எல்லா வடையையும் சாப்பிட்டே!!!"
என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

அதற்கு "சிம்பிள்! முதல்ல ஒரு வடையை எடுத்தேன்.
ரெண்டா பிய்த்தேன்.முதலில் ஒரு துண்டை வாயில
போட்டு மென்னு சாப்பிட்டேன். அப்புறம் ரெண்டாவது
துண்டை எடுத்தேன். வாயில போட்டு மென்னு
சாப்பிட்டேன்.. அவ்வளவுதான்" என்று அந்த தட்டில்
மீதமிருந்த ஒரு வடையையும் சாப்பிட்டுக்
காட்டினாளாம் மனைவி.

இப்படிப்பட்ட மனைவிகள் ஒரு சிலர் (!?) இருக்கிறார்கள்.
கணவன்களே, ஜாக்கிரதை.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

35 comments:

இராகவன் நைஜிரியா said...

நல்லாயிருக்குங்க அப்பு. இப்படி எல்லா வடையையும் ஒருத்தரே சாப்பிட்டா, அப்புறம் வயத்துவலி வந்து சிரமப்பட வேண்டுங்க..

இராகவன் நைஜிரியா said...

வடை அப்படின்னு சொல்லிட்டு ப்ரட் படம் போட்டா எப்படி?

தமிழிஷில் ஓட்டுப் போட்டாச்சுங்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாங்க இராகவன்!

சில பேருக்கு கை பெருசு!
சில பேருக்கு வாய் பெருசு!
சில பேருக்கு வயிறு பெருசு!
நினைச்சா எல்லோராலயும் சாப்பிட முடியுமா?
ஆனால், அந்த மனைவி சாப்பிட்டாளே???!!!

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா

கல கல காமெடி.....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//வடை அப்படின்னு சொல்லிட்டு ப்ரட் படம் போட்டா எப்படி?

தமிழிஷில் ஓட்டுப் போட்டாச்சுங்க//

'வடை'ன்னு நெனச்சிக்கிட்டே பாருங்ளேன்;
வடையாவே தெரியும் (ஹி..ஹி.. சமாளிச்சேன்.
படம் மாத்திட்டேன்.)

ஒட்டு போட்டதற்கும் நன்றி, ராகவன்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஹ ஹ ஹா

கல கல காமெடி.....//

சிரித்துக் கொண்டே பின்னூட்டமிட்டமைக்கு

ந்ன்றி, வசந்த்!!

GEETHA ACHAL said...

superb iruku...

இராகவன் நைஜிரியா said...

பின்னூட்டம் போட்டவருக்கு மதிப்பு கொடுத்து படம் மாற்றிய நிஜாமுதீன் அவர்களுக்கு எல்லோரும் ஒரு “ஓ” போடுங்க.

நன்றி நண்பரே.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வட போச்சே..,

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//superb iruku...//

-கீதா ஆச்சல்,
சூப்ப்ர்ப்-ஆ இருக்கு- வடையா? கதையா?
ஓ, இரண்டுந்தானா?
அப்படின்னா நன்றி + நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பின்னூட்டம் போட்டவருக்கு மதிப்பு கொடுத்து படம் மாற்றிய நிஜாமுதீன் அவர்களுக்கு எல்லோரும் ஒரு “ஓ” போடுங்க//

சரிங்க...பிழையைச் சுட்டிக் காட்டி
படம் மாற்றுவதற்கு யோசனை
சொன்ன இராகவன் அவர்களுக்கு
எல்லோரும் 'ஓ' போடுங்க!
இப்ப 'ஒ'கேவா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//வட போச்சே..,//

வாங்க சுரேஷ்!
வடை போனதினாலதானே இந்தக்
கதையே வந்துச்சி. நீங்களும்
வந்தீங்க?
வருகைக்கும் பின்னூட்டமிட்டமைக்கு
ந்ன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா வயிரா, வடை சட்டியா நிஜாம். நல்ல காமெடி.

பின்னோக்கி said...

நல்லாயிருக்கு ...முதல்ல தோசை, இப்ப வடை...அடுத்தது என்ன ??

நிஜாம் கான் said...

நிஜாம்! இது என்ன சொந்த அனுபவமா? பாட்டி வட சுட்ட கதைக்கு போட்டியா இன்னொன்னு ரெடி!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலக்குங்க நிஜாம் .....

SUMAZLA/சுமஜ்லா said...

ஒரு வழியா இப்ப தான் உங்க எல்லா பதிவையும் படிச்சேன். இப்படி கலக்கிட்டு இருக்கீங்கன்னு பெருமையா இருக்கு..........!
குறுகிய காலத்தில் எவ்ளோ முன்னேற்றம்? சந்தோஷம்...தொடருங்கள்.
எனக்கு சுத்தமா நேரமே போதுவதில்லை. இதோ இப்ப கூட கிடைத்த சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஹா ஹா வயிரா, வடை சட்டியா நிஜாம். நல்ல காமெடி//

S.A. நவாஸுதீன், நல்ல கேள்வி.

இந்தக் கதை மட்டும்தான் எனக்குத்
தெரிந்தது. வயிறா, வடை சட்டியா
என்று கேள்வி கேட்டால் என்ன பதில்
சொல்றது?

கருத்திற்கு நன்றி நவாஸ்தீன்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஒரு வழியா இப்ப தான் உங்க எல்லா பதிவையும் படிச்சேன். இப்படி கலக்கிட்டு இருக்கீங்கன்னு பெருமையா இருக்கு..........!
குறுகிய காலத்தில் எவ்ளோ முன்னேற்றம்? சந்தோஷம்...தொடருங்கள்//

வாங்க சுமஜ்லா! எனக்கு பிளோக்
ஆரம்பிக்க ஆர்வமூட்டிவிட்டு
இப்படி பாராமுகமாய் இருக்கீங்களே
என்று உங்களுக்கு மெயில் அனுப்ப
உத்தேசித்திருந்தேன்.

ஆனால்,
நீங்களே வந்திட்டிட்டீங்க, உங்கள்
கருத்தினால் எனக்கு ரொம்ப
சந்தோஷம். நேரம் கிடைக்கும்போது
அவசியம் வாருங்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நல்லாயிருக்கு ...முதல்ல தோசை, இப்ப வடை...அடுத்தது என்ன ??//

பின்னோக்கி... நன்றி!
அடுத்தது விரைவில் வரவுள்ளது.
எதிர்பார்ப்போம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நிஜாம்! இது என்ன சொந்த அனுபவமா? பாட்டி வட சுட்ட கதைக்கு போட்டியா இன்னொன்னு ரெடி!//


அன்புடன் கருத்து தந்த நிஜாம்.
சிறுவயதில் இந்தக் கதையை
எனக்கு எங்கள் அம்மா சொன்னார்கள்.

பாட்டி வடையுடன் இதை லிங்க் பண்ணிட்டீங்க,
நன்றி நிஜாம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//கலக்குங்க நிஜாம் .....//

நன்றி கிருஷ்ணா!
நீங்களும் புகுந்து விளையாடுறீங்களே!

SUMAZLA/சுமஜ்லா said...

//எனக்கு பிளோக்
ஆரம்பிக்க ஆர்வமூட்டிவிட்டு
இப்படி பாராமுகமாய் இருக்கீங்களே//

பாராமுகமா? அடடா... சில சமயம் எனக்கு பாத்ரூம் போகக் கூட நேரம் இருப்பதில்லை... வீட்டில் சமையலுக்கு ஒரு நல்ல ஆள் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்து விட்டால், மீண்டும் பழையபடி ப்ளாகில் தலை காட்டலாம் என்ற நப்பாசை உள்ளது.....துவா செய்யுங்கள்.

வேலைக்கு போவதென்பது வேறு, படிப்பதென்பது வேறு...மாலை வந்ததும், எழுதணும், படிக்கணும். இதோ, இப்ப கூட செவ்வாய் கிழமை 2 பரிட்சை இருக்கு...ஜாலியா இங்க ப்ளாகில் கதைத்துக் கொண்டிருக்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பாராமுகமா? அடடா//

1. நல்ல சமையல் ஆள் கிடைக்கட்டும்.

2. பழையபடி பிளாக்கில் புதிய பதிவுகள்
தாருங்கள்.

3. நல்லபடியாக 2 பரிட்சையிலும்
எழுதி நல்ல மார்க் எடுங்கள்.

நானும் துஆ செய்கிறேன்.

mymuji said...

Nizam,

Super Comdey

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Muji said...
Nizam,

Super Comdey//

வாங்க முஜி(ப்),
வந்து வெகு நாட்களாகிவிட்டனவே?
இரசித்து, கருத்து தந்ததற்கு நன்றி!

shabi said...

மனைவிக்கு ஜீரண சக்தி அதிகம் அதான்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//shabi said...
மனைவிக்கு ஜீரண சக்தி அதிகம் அதான்//

ஜீரண சக்தி அதிகம்தான். ஆனால் இப்படி
சாப்பிட்டால் 'சக்தி'க்கு மீறி செலவாகுமே?

நன்றி ஷபி!

Anonymous said...

dear nizam, I go through all your writings. I enjoyed very much.I like your story otha kalu kokku, ippadiyum oru manaivi, otti pakkiren etc very much. continue your writing. thankyou.your K.Rajasekaran, Mayiladuthurai

k.Rajasekaran said...

dear nizam,please help me to open a blogspot like you. rajasekaran, mayiladuhurai

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//k.Rajasekaran said...
dear nizam, please help me to open a blogspot like you. rajasekaran, mayiladuhurai//

how are you sir?
thank you for your kind comments.
i will send you mail later sir.

-nizam

karthikeyanjk said...

நல்ல காமெடி..

உங்கள் சிறந்த் நகைச்சுவை கற்பனைக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே !!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நல்ல காமெடி..

உங்கள் சிறந்த் நகைச்சுவை கற்பனைக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே //

நன்றி நண்பர் கார்த்திக்.
தொடர்ந்து படிக்க வாருங்கள்,
கருத்துக்களும் தாருங்கள்.

மாயவரத்தான் said...

//சில பேருக்கு கை பெருசு!
சில பேருக்கு வாய் பெருசு!
சில பேருக்கு வயிறு பெருசு!//

நல்ல வேளை. இத்தோட நிறுத்திட்டீங்க.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//மாயவரத்தான்.... said...
//சில பேருக்கு கை பெருசு!
சில பேருக்கு வாய் பெருசு!
சில பேருக்கு வயிறு பெருசு!//

நல்ல வேளை. இத்தோட நிறுத்திட்டீங்க.//

மாயவரத்தான்... இடைவேளைக்குப்
பிறகு மீண்டும் தொடர்கிறது.

சிலருக்கு கால் பெருசு!
சிலருக்கு கால் விரல் பெருசு!
சிலருக்கு கால் விரல் நகம் பெருசு!
மாய்வரத்தான் போதுமா?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...