'மன வலி-மை (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
"அம்மா, கால் வலிக்கு டாக்டர் சொன்ன ஆயின்மென்ட் வாங்கி வந்திருக்கேன்! காலை நீட்டு" என்று சொல்லி, மருந்தைத் தடவிவிட்டான் பாபு!
"அப்பா, பாட்டிக்கு நான் குணமா தடவிவிடுறேன்!" என்று வாங்கி தடவிவிட்டான் பேரன் ராஜா.
"வலி இப்ப பரவாயில்லை கண்ணுகளா! நீங்க ரெண்டு பேரும் தடவிவிட்டதுமே வலி பறந்து போச்சிப்பா" என்றாள் அம்மா.
"டாக்டர்ட்ட போலாமா அம்மா?"
"இப்ப வேணாம்ப்பா! போன வாரம்தானே போய் காட்டினோம்? 'வயசாயிடுச்சி; அப்படிதான் வலி வரும்'னு சொன்னாறே?"
"வயசாயிடுச்சிங்கறதுக்காக வர்ற வலி இல்லம்மா இது! வயசுங்கறது நம்மளோட வாழ்நாள் அனுபவம். ஏதோ ஒரு வலி எல்லாருக்குமே உண்டுதானேமா?"
"நீ சொல்றது சரிதான் பாபு! அப்பா இறந்து போனதும் எனக்கு மன வலிதானே?"
"மன வலியை,
மனவலிமையா மாத்திக்கணும்மா! அப்பா இறந்தா என்னம்மா? நாங்களாம் இருக்கோம்ல?"
"அப்பா இருந்தா, அது ஒரு தெம்புதானே? அவரும் போயிட்டாரு! எனக்கும் என்ன என்னமோ வியாதி வந்து படுத்துது! வயசும் ஆயிடுச்சு! அப்பா போன மாதிரியே நானும் போக வேண்டியதுதான்!"
"அப்படி சொல்லாதேமா! இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக் குறிச்சி வச்சிருக்கான்! வயசானதுக்காகவெல்லாம் நாம போக முடியாது! 6 வயசுலயும் இறப்பு! 100 வயசுலயும் இறப்பு! இன்னும், 5, 10, 30 வயசு,
50 வயசுனு எத்தனை பேரு எத்தனை விதமா இறக்குறாங்க? ஏன் எல்லாரும் வயசாகி, வயசாகி இறக்குறதில்லே? இறைவன்தான் இங்கே முதலாளி! அதனால இந்த மாதிரி நினைப்பையெல்லாம் மூட்டை கட்டி வை!
நீ 100 ஆண்டு வாழ்வேமா! நான் இறைவன்ட்ட வேண்டிட்டே இருப்பேன்! ராஜாவுக்கு கல்யாணம், பிறக்குற குழந்தை எல்லாத்தையும் நீ பார்ப்பே!
நிம்மதியா தூங்கு!"
அம்மாவின் முகம் தெளிவானதைப் பார்த்தவாறே, அம்மாவின் மடியிலே படுத்து தூங்கிவிட்ட ராஜாவைத் தூக்கி, பாயில் போட்டுவிட்டு, மனைவி செல்வியைப் பார்த்தான் பாபு!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்
'தமிழக எழுத்தாளர் குழுமம்' நடத்திய போட்டிக்காக எழுதப்பட்டது.
'எழுத்தாளர் ரிஷிவந்தியா' அவர்கள், இன்ஸ்டாகிராம்-ல் பதிவுசெய்துவரும் 'நறுக்ஸ் நொறுக்ஸ்'-லிருந்து ஒரு கருத்தை வைத்து கதை எழுதும் புதுமையான போட்டி!
நறுக்ஸ் நொறுக்ஸ் இணைய முகவரி:
விடியற் காலை எழுந்தவுடன்
விரல் நடுங்க எடுக்கின்றனர்
மூத்த குடிமக்கள் கைப்பேசிகளை...
எந்த நண்பரின் இரங்கல் செய்தி
வந்திருக்குமோ எனும் நடுக்கத்துடன்...
- ரிஷிவந்தியா
12 comments:
செய்தி தருகதை.
சிறப்பு
பாராட்டுகள்
@தமிழ்ப்பூ...
கதையைப் பாராட்டியமைக்கு நன்றி!
@Yarlpavanan...
பாராட்டியமைக்கு நன்றி!
நெகிழவைத்த கதை நண்பரே... வாழ்த்துகள்.
அருமை
Your story is super and fantastic
@KILLERGEE...
வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!
@கரந்தை ஜெயக்குமார்...
நன்றி சார்!
@Unknown...
பெயர் குறிப்பிடாத நண்பருக்கு நன்றி!!!
அருமை... பாராட்டுகள் தோழர்...
@திண்டுக்கல் தனபாலன்...
பாராட்டியதற்கு நன்றி தோழரே!
Post a Comment