...பல்சுவை பக்கம்!

.

Saturday, February 5, 2022

உறவுகள் தொடரும் -சிறுகதை #163



ஃபிரான்ஸிலிருந்து வெளிவரும் 'தமிழ்நெஞ்சம்' பிப்ரவரி 2022 மின்னிதழில் பிரசுரமான எனது சிறுகதை!
*
உறவுகள் தொடரும்! (சிறுகதை) 
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

உறவுகள் தொடரும்!
(சிறுகதை)
-நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வெளியே மழை 'ஜோ'வென பெய்து கொண்டிருந்தது.

'பாண்டியன் கடை'-க்கு மளிகை சாமான்கள் வாங்கச் சென்றிருந்த மகள் மதனா இன்னும் திரும்பி வரவில்லை. 

அப்போதுதான் வாங்கவேண்டிய மளிகைப் பட்டியலில்,
'கடலைப் பருப்பு' என எழுதாதது நினைவில் வந்தது விமலாவுக்கு.
மதனாவுக்கு எப்படி தெரிவிப்பது? கடை அண்ணாச்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று பார்த்தால், அலைபேசியில் மின்கலத்தின் சக்தி தீர்ந்திருந்தது! வீட்டிலும் மின்சாரம் இல்லை.
மழையும் சீராக பெய்து கொண்டிருந்ததால், தானும் செல்ல இயலாமல் விமலா தவித்தாள்.

மழை விட்டு சிறிது நேரத்தில் மதனா வந்துவிட்டாள்.

பையிலிருந்து பொருட்களை எடுக்கும்போது, அதில் கடலைப் பருப்பும் இருந்தது.

"அம்மா! எனக்கு பள்ளி விடுமுறைங்கறதால, நாளைக்கு ஊரிலிருந்து ரெண்டு தாத்தாவும் ரெண்டு பாட்டியும் வர்ராங்கள்ல? 
தாத்தா ரெண்டு பேருக்குமே
மசாலா வடை பிடிக்கும்; கடலைப் பருப்பு தீர்ந்து போச்சி-னு நீ நேத்து அப்பாட்ட சொல்லிட்டிருந்தியே, அது ஞாபகம் வந்தது. பட்டியலில் நீ எழுத மறந்திட்டே! ஆனா, நான் வாங்கி வந்திட்டேன்! கடலைப் பருப்பைதானேம்மா நீ முதலில் எழுதியிருக்கணும்?" என்று
உறவுகளை மதிக்கும் மதனா கேட்டதும் விக்கித்துப்போன விமலா, மகிழ்ச்சி மேலிட "என் செல்லக்குட்டி" என்று மதனாவை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்!
*

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

6 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க ஒரு சின்ன நிகழ்வு அதைப் படைத்த விதம் நன்று வாழ்த்துகள்

கீதா

KILLERGEE Devakottai said...

குட்டிக்கதை அருமை நண்பரே...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு சிறுகதை. பாராட்டுகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கீதா மேடம்...

தங்களின் அழகிய கருத்துக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@KILLERGEE Devakottai...

பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@வெங்கட் நாகராஜ்...

தங்கள் கருத்துக்கு நன்றி!!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...