சிறுகதைப் போட்டி #165
24/07/2022 ஞாயிறன்று 'தமிழக எழுத்தாளர்கள்' குழுமத்தில், ஒரு கதையைப் பதிவிட்டு, அதன் சரியான முடிவை எழுதுங்கள் என்பதாக ஒரு போட்டி வைக்கப்பட்டது.
பரிசு பெற்ற மூன்றில் நான் எழுதிய கதை முடிவும் ஒன்று!
இதோ கதையும் மூன்று முடிவுகளும்!
சிறுகதை:
நேரம்! - திருப்பூர் சாரதி
====== ===============
" கோபுசாரைப் பார்க்கணும்! "
குரல் கேட்டு நிமிர்ந்தார் அந்தக் கம்பெனியின் செக்யூரிட்டி. எதிரே கல்லூரி மாணவன் ஒருவன் நின்றிருந்தான்.
" அப்பாயின்மென்ட் இருக்கா தம்பி? "
" இல்லேங்க "
செக்யூரிட்டி சிரித்தபடியே,
" சாரைப் பார்க்க அப்பாயின்மென்ட் வாங்கவே எத்தனை நாளாகும்னு தெரியுமா? சும்மா நினைச்ச நேரத்தில் யாரும் பார்த்திட முடியாது. உங்க பேரையும், போன் நம்பரையும் எழுதிவச்சுட்டுப் போங்க, உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தாக் கூப்பிடுவாங்க. " என்றார் நக்கலாக!
" ஆனா அவர் எங்க காலேஜ் விழாவுக்கு வந்தப்போ, மாணவர்கள் ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா எந்த நேரமும் என்னை வந்து பார்க்கலாம்னு சொல்லிட்டு வந்தாரே...! "
" அவங்க மேடைக்காக பேசறதை எல்லாம் நம்பி இப்படி வரக்கூடாது தம்பி. வேலை ஆகணும்னா காத்திருந்துதான் ஆகணும். கிளம்புங்க, போன் வரும்! "
ஏமாற்றத்துடன் கிளம்பினான் அந்தக் கல்லூரி மணவன்.
அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...
கதாசிரியர் எழுதியிருந்த முடிவு:
திரு.திருப்பூர் சாரதி அவர்கள் எழுதிவைத்திருந்த முடிவு:
தன் பங்களாவுக்கு வெளியே, கக்கா போக முரண்டு பிடித்த நாயைப் பிடித்துக்கொண்டு ஒருமணி நேரமாகக் காத்திருந்தார் கோபு!
திருப்பூர் திரு. சாரதி அவர்கள்
...................................
இனி பரிசு பெற்ற 3 முடிவுகள்:
பரிசு பெற்றவை:
அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...
தொடர்ச்சி:
டாய்லட் வாசலருகே நின்றவர், "ஒன்றறை லிட்டர் காஃபி குடிச்சும் இந்த கக்கா வருவேனாங்குதே!?!" என புலம்பலானார்!
முடிவு எழுதியவர்:
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...................................
இன்றைய போட்டிக்காக...
"எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா நான்தான் கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறே..." என்றபடி தனது செல்லநாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் கோபு.
- அஜித்
...................................
திருப்பூர் சாரதி சாரின் நேரம் கதையின் முடிவை யூகிக்கும் போட்டி!
நேரம்!
======
"எனக்காக எத்தனை பேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடானா", என்றபடி
தன்மேல் ஆசையாய் தாவி ஏறிய டாமியை கட்டிக்கொண்டார் கோபு
அ.வேளாங்கண்ணி, திருச்சி.
.
9 comments:
சூப்பர் வாழ்த்துகள் நண்பரே
நல்ல கற்பனை.
பிறருடைய உள்ளத்தில் உள்ளததை ஏறத்தாழ அப்படியே கற்பனை செய்வது என்பது ஒரு பெரிய திறமை.
ஒருவருடைய எழுத்தை படித்த பிறகு முதலில் அவருடைய சிந்தனையை அறிய வேண்டும்.
மீண்டும் பலமுறைப் படித்து உள்ளத்தை அறிய முயலவேண்டும் என்பார். ஜான் ரஸ்கின் என்ற அறிஞர். உங்களுக்கு இயல்பாகவே அந்த திறமை இருப்பது பாராட்டத்தக்கது பாராட்டிற்குரியது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@KILLERGEE Devakottai
பாராட்டி வாழ்த்திய தங்களுக்கு நன்றி நன்பரே!
@ Varafharajan
தங்களின் மனம் திறந்த, மடை திறந்த வெள்ளமான பாராட்டுக்கு, மனம் மகிழ்ந்த நன்றிகள் சார்! 💕
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்து பரிசையும் வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சார்!
வாழ்த்துகள்! முடிவும் அருமை
துளசிதரன்
கீதா
@ துளசிதரன் சார்
@ கீதா மேடம்
கருத்திற்கு நன்றி!
கலக்குங்க.... கலக்கல்.
@Anonymous ...
கருத்துக்கு நன்றி!
Post a Comment