...பல்சுவை பக்கம்!

.

Sunday, September 4, 2022

ஆயிரம் ரூபாய் பரிசு, எனக்கே எனக்கா?




ஆயிரம் ரூபாய் பரிசு, எனக்கே எனக்கா!!!? #171

2007-ஆம் காலக் கட்டம்!

மயிலாடுதுறையிலிருந்து
சிதம்பரம் வழியாக லால்பேட்டைக்கு செல்லும்போது அல்லது லால் பேட்டையில் இருந்து சிதம்பரம் வழியாக மயிலாடுதுறைக்கு வரும்போது (லால்பேட்டையில் எங்கள் அக்கா வீடு) சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வழமையாக ஒரு குறிப்பிட்ட கடையில் ஞாயிறன்று தினமலரும் வாரமலரும் வாங்குவது வழக்கம்.

அதில் வந்த சிறுக(எ)தையோ
படித்துவிட்டு விமர்சனம் எழுதினேன்.

ஒரு வாரத்திற்கு மறு வாரம் ஞாயிற்றுக்கிழமை (08/07/2007)  எனது தங்கையும் தங்கையின் கணவரும் சிதம்பரம் வழியாக நீடூருக்கு வரும்போது தினமலர் +  வாரமலர் வாங்கி வரச் சொல்லியிருந்தேன்.

அப்படியே வாங்கி வந்து கொடுத்தார்கள். பார்த்தால் தினமலர் இருக்கிறது; வாரமலர் அதில் இல்லை.

அடடா, என்ன செய்வது?

அதன்பின்
13/07/2007 வியாழக் கிழமை நான் லால்பேட்டைக்குச் சென்றேன்.

சிதம்பரத்தில் அதே கடைக்குப் போய், "அண்ணே, ஞாயிற்றுக்கிழமை நீங்க தினமலரோடு வாரமலர் கொடுக்கலையே? அந்த வாரமலர் இருக்காண்ணே?" என்று கேட்டேன்.

என்னைப் பார்த்ததும் 'நம்ம கஸ்டமர்தான்' என நினைத்தாரோ, புன்னகைத்தவாறே, "தேடிப் பார்க்கிறேன் தம்பி!" என சொல்லிவிட்டு தேடினார்; உடனே கிடைத்துவிட்டது. கொடுத்தார். வாங்கிப் பிரித்தேன்!

எனது அர்ச்சனைக்கு 1,000 ரூபாய் பரிசு என்பதைக்கண்டு மகிழ்ச்சி மேலிட, கடைக்காரரிடமே காட்டினேன்!

"அட, நீங்களா தம்பி? நல்லாருக்கு!" என்று அவரும் சந்தோஷப்பட்டார்!

உடனே, வேறு இரு புதினங்கள் அவரிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டு 'நன்றி' சொல்லி வந்தேன்!

ஒரு வாரத்திற்குள் பரிசுப் பணம் அஞ்சலாணை மூலமாக வந்து சேர்ந்தது! அஞ்சல்காரருக்கும் அன்பளிப்பு வழங்கி மகிழ்வித்தேன்!


மேலும் ஒரு தகவல்!
அப்போது வாரமலரில் இது உங்கள் இடம் பகுதிக்கு முதல் பரிசு ரூபாய் 1,000, இரண்டாம் பரிசு ரூபாய் 500,
மற்ற கடிதங்களுக்கு ரூபாய் 150 மட்டும் சன்மானமாக வழங்கப்பட்டது!

.



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

7 comments:

Anonymous said...

அற்புதமான நினைவோடை பகிர்வு. அந்த முதல் அனுபவம் கோடிக்கணக்கான அலாதியான இன்பம்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

KILLERGEE Devakottai said...

பழைய நிகழ்வாயினும் வாழ்த்துகள்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ Anonymous...
வாங்க (பெயர் தெரியவில்லை)

கருத்துரைத்தமைக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ திண்டுக்கல் தனபாலன் ...

வாழ்த்தியமைக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ KILLERGEE Devakottai ...

பழைய நிகழ்வுதான்!
வாழ்த்திற்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

பழைய நிகழ்வு என்றாலும் இப்போதுதானே எங்களுக்குத் தெரிகிறது ! வாழ்த்துகள் !

கீதா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...