...பல்சுவை பக்கம்!
.
Saturday, August 19, 2017
பிக் பாக்கெட் - குமுதம் இதழில்! #132
Thursday, February 2, 2017
முல்லை தங்கராசன் #131
முல்லை தங்கராசன்.

.

முல்லை தங்கராசன்.
இந்தப் பெயர் 'முத்து காமிக்ஸ்' மூலமாக அறிமுகம். முத்து காமிக்ஸ் அட்டையிலேயே 'பதிப்பாசிரியர்: முல்லை தங்கராசன்' என்று அச்சிட்டிருக்கும்.
சிறிய கால இடைவெளிக்குப் பின்னால், "ரத்னபாலா" எனும் பாலர் வண்ண மாதமலர் ஆசிரியராகவும், தொடர்ந்து 'மணிப்பாப்பா' ஆசிரியராகவும் தெரியும்.
சுப்ரஜா ஸ்ரீதரன் ஆசிரியராகவும் கீழை அ. கதிர்வேல் உதவி ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்த 'வாதினி' மாத இதழில் சமீபத்தில் முல்லை தங்கராசன் எழுதிய 'பணம், பெண், பகை' எனும் புதினத்தைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
மேலே குறிப்பிட்டிருந்த இடைவெளி காலத்தில் 'மக்கள் குரல்' நாளிதழின் 'நவரத்தினம்' மாத இதழில் முல்லை தங்கராசன் எழுதிய புதினம் வந்திருந்தது. தலைப்பு: "ஊர் சிரித்த கதை".
கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், "இப்படியாக அந்த ஊர் சிரித்தது" என்று முடித்திருப்பார்.
இதற்குமுன் இப்படி எந்த எழுத்தாளரும் செய்தார்களா என்பது தெரியாது. ஆனால் சுஜாதா பிறகுதான் "ஆ..." என்ற பாணியில் ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Labels:
நவரத்தினம் - மாத இதழ்,
முல்லை தங்கராசன்,
ஜிகினா
Wednesday, January 4, 2017
அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130
அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130
பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட பாடல், இது!
திரை : தேன் நிலவு.
மெட்டு : பாட்டு பாடவா!
இயற்றியவர்: எஸ். ஏ. மன்சூர் அலி.
அன்பு சோதரா! என் அன்பு சோதரா!!
விரைந்து ஓடி வா! விரைந்து ஓடி வா!!
வல்ல நாயன் தந்த மார்க்கம் நிலை நிறுத்த வா! - ஒரு
நல்ல மாற்றம் காண்பதற்கு தோள் கொடுக்க வா!!
(அன்பு சோதரா...)
கொஞ்சமல்ல நஞ்சமல்ல இந்த நாட்டிலே - தீமை
எங்கு நோக்கினும் தலை விரித்து ஆடுதே.
மாற்றம் காண வேடமிட்டு வந்த கொள்கைகள் - மேலும்
சிக்கலுக்குள் சிக்கலாகி தோற்று போனதே
தீர்வு சொல்ல வா! நல்ல தீர்வு சொல்ல வா - எங்கும்
தீமை நீக்கி நீதி காக்கும் தீனை சொல்ல வா!
(அன்பு சோதரா...)
வல்லவன் தன கட்டளைகள் இந்த நாட்டையே
ஆளும் சட்டமாக ஆக்கிக் காட்டும் ஆட்சி காண வா!
குற்றமற்ற சூழல் தந்து தீமை நீக்க வா! - மக்கள்
அச்சமற்று வாழுகின்ற மாட்சி காண வா!
சாட்சி சொல்ல வா! நீயும் சாட்சி சொல்ல வா!
மறுமை வாழ்வு நம்மைத் தேடி வந்து, அழைக்கும் ஓடி வா!

Saturday, July 23, 2016
செட்டி சாலி கடை! #129
செட்டி சாலி கடை!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
.
செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன்.
கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது.
"மைதா பரோட்டா சாப்பிடாதீர்கள்; மாரடைப்பு வரும்!" என்று ஊராட்சி மன்றத் தலைவரின் வேண்டுகோள் காணப்பட்டது அந்த போர்டில்.
"மைதா பரோட்டா சாப்பிடாதீர்கள்; மாரடைப்பு வரும்!" என்று ஊராட்சி மன்றத் தலைவரின் வேண்டுகோள் காணப்பட்டது அந்த போர்டில்.
கடை முதலாளியின் மகனிடம் நான் கேட்டேன்: "அந்த போர்டினுள்ள அறிவிப்பு காரணமாக உங்கள் வியாபாரத்திற்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?" என்று.
"பாதிப்பு எதுவுமில்லை; அதனால், நல்ல பலன்தான் கிடைக்கிறது" என்று பதில் சொன்னார் அவர்.
"எப்படி?" என்று நான் கேட்டேன்.
"அந்த போர்டை நின்னு படிக்கிறாங்க! அப்படியே உள்ளே வந்து பரோட்டாவை சாப்பிட்டுட்டு போறாங்க! வியாபாரம் அதிகமாகுதே தவிர, குறையலை!" என்றார் அவர்.
"ஓ... கெட்டதிலேயும் ஒரு நல்லது இருக்கும்பாங்களே, இதுதானா அது?!" என்று சொல்லிவிட்டு, சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டேன், நான்!
.
.
மறக்க முடியுமா? #128
மறக்க முடியுமா?
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்,

இறைவனுக்கு நன்றி!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள்
தப்பித்தோம்!!!
நாதுராம் கோட்சே
கேடுகெட்ட நீ
மாட்டிக் கொண்டாய்!
கொல்வது எப்படி?
சொல்லித் தந்தாய்!
மார்பில் குத்துவது எப்படி?
அல்ல, அல்ல,
நெஞ்சில் சுடுவது எப்படி?
சொல்லித் தந்தாய்!
கும்பிடுவதுபோல் நம்பவைத்து
கொல்வது எப்படி?
நயவஞ்சகம் என்பது என்ன?
சொல்லித் தந்தாய்!
ஒரு தேசத்தின் ஜீவனாய்
இருந்தவரை எப்படி கொன்றாய்?
சொல்லித் தந்தாய்!
'பாவம் ஓரிடம்;
பழி ஓரிடம்'
என்பார்கள்.
அதை எளிதாய்
புரிய வைத்தாய்!
அதை, ஆர்.எஸ்.எஸ்.காரனாய்
நீ கொலை செய்து,
இஸ்லாமியர்மேல்
பழி போடுவது எப்படி?
சொல்லித் தந்தாய்!
"மாபாதகன்" என்பதன்
பொருள் என்ன?
சொல்லித் தந்தாய்!
இவற்றிற்கெல்லாம் ஒரு
சரித்திர சான்று
நீ சுட்டுக் கொன்ற
எங்கள் காந்தித் தாத்தா!
தேசத்தின் பிதா!
கேடுகெட்ட நீ
மாட்டிக் கொண்டாய்!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள்
தப்பித்தோம்!!!
மறக்க முடியுமா?
.
Friday, January 1, 2016
நகைச்சுவை; இரசித்தவை (20) #127
நகைச்சுவை; இரசித்தவை (20) #127
புன்னகைப் புத்தாண்டு 2016.!

ஹா... ஹா.. ஹாஸ்யம்! (1)
.
புன்னகைப் புத்தாண்டு 2016.!

ஹா... ஹா.. ஹாஸ்யம்! (1)
"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க தலைவரே... ஒரு நல்ல செய்தி இருக்கு!"
"சொல்லுய்யா..."
"தாய்லாந்துல எலெக்சன் அறிவிச்சிருக்காங்களாம்!"
-சுரா. மாணிக்கம்
===============================================================
ஹா.. ஹா.. ஹா..ஸ்யம்! (2)
" 'ஆட்சியைப் பிடிப்பதுதான் என் கனவு'னு தலைவர் சொல்றாரே, பிடிச்சுடுவாரா?"
"அதான்... அவரே சொல்லிட்டாரே, கனவுன்னு!"
- எஸ். கோபாலன்.
===============================================================
ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (3)
"வாக்களித்தவர்களுக்கு தலைவர் இப்போது நன்றி சொல்வார்!"
"அந்த நாலு பேருக்கு நன்றி... வணக்கம்!"
-அ. ரியாஸ்
===============================================================
ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (4)
"தேர்தல் கமிஷன் வர வர ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி ஆயிடுச்சு!"
"ஏன் தலைவரே புலம்பறீங்க?"
"டெபாசிட்டைத் திருப்பித் தர மாட்டேங்கிறாங்களே!"
- பி. ஆர். பாண்டி
===============================================================
ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (5)
"ஆட்சி அமைக்க கவர்னர்கிட்ட இருந்து இன்னும் அழைப்பு வரமாட்டேங்குதேய்யா?"
"தலைவரே... நாம ஜெயிச்சது இடைத்தேர்தல்ல!"
-மகா
===============================================================
ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (6)
"எங்க தலைவர் வெளிப்படையானவர் என்பதை இப்போதாவது நம்பறியா?"
"அதுக்காக 'பழச்சாறு அருந்தும்வரை உண்ணாவிரதம்'னா போர்டு வெப்பீங்க?"
-அதிரை புகாரி
.
Thursday, December 31, 2015
வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு #126
2015 நிறைவுப் பதிவு!
வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு - 126
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு - 126
எனக்குத் தெரிந்த ஒரு நபர், தனது வாடிக்கையாளருக்கு பொருள்களை கடனில் விற்பனை செய்திருந்தார். வாடிக்கையாளர் அத்தொகையை ஒரு மாதத்தில் தருவதாகச் சொன்னவர், சொன்னபடி தரவில்லை.
இந்த நபர், வாடிக்கையாளரிடம் பல முறை கேட்டுவிட்டார். வாடிக்கையாளர் 'அடுத்த மாதம் தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன்' என்று கால நீட்டிப்பு செய்துவந்தார். மாதங்கள் 6 கடந்தபின்னும் பணம் வசூலாகவில்லை.
இந்த நபர், வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று சப்தம் போட்டுக் கேட்டும் வாடிக்கையாளர் அசரவில்லை. அதே "அடுத்த மாதம் தருகிறேன்" பதிலைத்தான் சொன்னார்.
இந்த நபருக்கு கோபம் அதிகமாகிவிடவே, "இந்தப் பாரு, அடுத்த வாரம் வருவேன்... பணம் தரலைன்னு வச்சிக்க; துப்பாக்கி எடுத்து சுட்ருவேன், ஜாக்கிரதை" என்று கத்திவிட்டார்.
வாடிக்கையாளரோ, "அண்ணே, சுடுங்க! நல்லா சுடுங்க!! ஆனால், நெஞ்சில சுடுங்க! அப்பத்தான் பொட்டுனு உயிர் போகும்! ஆனால், உங்களுக்கு சல்லி வரவே வராது! அதனால, நெஞ்சில சுடுங்க!" என்று கூலாக பதில் சொன்னாராம்.
இந்த நபர் மிரண்டு போய் திரும்பி வந்து, எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மீதியை அடுத்த வாரம் சொல்றேன். (இன்ஷா அல்லாஹ்!)
குறிப்பு: இந்த சம்பவம், நமது தாய் நாட்டில் நடக்கவில்லை!
'சல்லி' என்பது 'காசு' அல்லது 'பணம்' ஆகும்.
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
மூக்குடைப்பு போட்டி - பதிவு #125
மூக்குடைப்பு போட்டி - பதிவு #125
சூப்பர் நாவல் 1986 இதழ் 'மூக்குடைப்பு போட்டி அல்லது கால் வாரல் போட்டி'யில் பரிசு பெற்று பிரசுரமானது.

நயாஸ். எங்க ஊரு நண்பன். [பெயர் மாற்றப்பட்டுள்ளது.] எனது க்ளாஸ்மேட்கூட. சில விஷயங்களைக் கூறிவிட்டு
அறிவுஜீவி மாதிரி 'That is Nayas' என்று தன்னை,
தன் தலையை தட்டிக் கொள்வான்.
ஒருமுறை அப்ளிகேஷன் ஒன்றை அனுப்புகையில் Post Office-ல் என்னிடம் 'அதை அப்படி எழுது, இதை இப்படி வை, இந்த மாதிரி ஒட்டு' என்று சொல்லிக் கொண்டே அவனது application-ஐயும் ஒட்டி முடித்தான். அவன் application form தவிர மற்றதெல்லாம் உள்ளே வைத்து கவரை ஒட்டிவிட்டான். Application Form மட்டும் வெளியில். அவனிடம் அதை எடுத்துக் காட்டினேன்.
இதே இதழில் பிரசுரமான பரிசுபெற்ற எனது கவிதை:
இங்கு சுட்டுங்கள்: "இன்று - நண்பா!"
அந்த இதழ் அட்டைப்படம்:

"ச்சே, நான் ஒரு மடையன்" என்று தலையில் தட்டிக் கொண்டான். நான் உடனே, "அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஏன்னா, That is Nayas" என்றேன். அவன் முகம் போன போக்கு...
இதே இதழில் 'சுபா பதில்கள்' பகுதியில் வந்த எனது கேள்வி + சுபா பதில்:
கேள்வி: தமிழ் - மகளா? அன்னையா?
சுபா பதில்: பயிலும்வரை, நிலா சோறூட்டும் அன்னை!
கைவந்த பின், அடங்கி நடக்கும் மகள்!!
இங்கு சுட்டுங்கள்: "இன்று - நண்பா!"
அந்த இதழ் அட்டைப்படம்:
.
Labels:
125-ஆவது பதிவு,
சுபா,
சூப்பர் நாவல்,
மூக்குடைப்பு போட்டி
Subscribe to:
Posts (Atom)