...பல்சுவை பக்கம்!

.

Wednesday, October 7, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 6


ஆசிரியர்: கோபால், அஞ்சும் மூனும்
எவ்வளவு?

கோபால்: ம்..ம்.. வந்து.. ஏழு சார்.

ஆசிரியர்: என்ன ஏழா? எப்படி
கூட்டினாலும் வராதேடா?

கோபால்: தப்பாக் கூட்டினால் வரும்
சார்!!!

#######################################

தாத்தா: டேய் கோ..வாலு! என்னோட
கண்ணாடியக் காணோம்; கண்ணு
தெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம்
தேடி எடுத்துக் கொடுடா.

கோபால்: போ தாத்தா, எனக்கு
வேலை இருக்கு. நீயே கண்ணாடியப்
போட்டுக்கிட்டு தேடி எடுத்துக்கோ!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தலைமையாசிரியர்: (பள்ளி ஆண்டு
விழாவில்) : பள்ளிக்கு தினமும்
லேட்டா வந்தாலும், முன் சொன்ன
காரணத்தையே மறுமுறையும் சொல்லாமல்
தினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்
சொன்ன வர(ரா)தராஜனுக்கு இந்த
சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.

!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

13 comments:

இராகவன் நைஜிரியா said...

// தினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்
சொன்ன வர(ரா)தராஜனுக்கு இந்த
சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.//

இது சூப்பர் & அட்டகாசம்.

இந்த பையன் வருங்காலத்தில் நல்ல திரைக்கதை எழுதக்கூடிய சாத்திய கூறுகள் தெரிகின்றன.

இராகவன் நைஜிரியா said...

// போ தாத்தா, எனக்கு
வேலை இருக்கு. நீயே கண்ணாடியப்
போட்டுக்கிட்டு தேடி எடுத்துக்கோ //

ரொம்ப சமத்து பேராண்டிதான் போங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

// தப்பாக் கூட்டினால் வரும்
சார்!!!//

செம்ம கடி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இந்த பையன் வருங்காலத்தில் நல்ல திரைக்கதை எழுதக்கூடிய சாத்திய கூறுகள் தெரிகின்றன.//

நல்லாச் சொன்னீங்க, இராகவன்!
நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//// தப்பாக் கூட்டினால் வரும்
சார்!!!//

செம்ம கடி//

நான் ஜோக்'கடி'ச்சேன். ஆனால்,
அது செம்ம கடியாப் போச்சா!
நன்றி வசந்த்!

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல நகைச்சுவை உணர்வு .................ஏன் தம்பி கூட அசத்த போவது யாரிலே வருகிறார் ...
அவர் பெயர் மதுரை ராமகிருஷ்ணன்

S.A. நவாஸுதீன் said...

3-வது சூப்பர் நிஜாம். மற்றதும் நல்லா இருக்கு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//வெண்ணிற இரவுகள்....! said...
நல்ல நகைச்சுவை உணர்வு .................//

நன்றி 'வெண்ணிற இரவுகள்.'
உங்கள் தம்பிக்கு நல்ல பிரகாசமான
எதிர்காலம் உண்டு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//S.A.நவாஸுதீன் said...
3-வது சூப்பர் நிஜாம். மற்றதும் நல்லா இருக்கு//

3-ஆவதை சூப்பர் என்றும்
மற்றவற்றை நல்லாயிருக்கு என்றும்
பாராட்டியதற்கு நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

எல்லாமே, ஹா...ஹா... ஹாஸ்ய வகை! சினேகாவின் சிரிப்பு எதற்கு? நீங்களும் யூத்னு காட்டிக்கவா????(வாய் விட்டு சிரிக்கக் கூட எனக்கு இப்போ தான் நேரம் கிடைத்தது! டெம்ப்ளேட் மாற்றலையா?)

அன்புடன் மலிக்கா said...

நிஜாமுதீன் அண்ணா வயிறு வலிக்கிறது [வாயும் சேர்ந்துதான்]

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//SUMAZLA/சுமஜ்லா said...
எல்லாமே, ஹா...ஹா... ஹாஸ்ய வகை! சினேகாவின் சிரிப்பு எதற்கு? நீங்களும் யூத்னு காட்டிக்கவா????(வாய் விட்டு சிரிக்கக் கூட எனக்கு இப்போ தான் நேரம் கிடைத்தது! டெம்ப்ளேட் மாற்றலையா?)//

வாங்க சுமஜ்லா. வந்தமைக்கு நன்றி!

மூன்று நகைச்சுவைக்காகவும் மூன்று
முறைகள் 'ஹா...ஹா...ஹா...'வா?

சரிங்க, ஸ்னேகாவைப் போடாமல்
கே.ஆர்.விஜயாவையா போட முடியும்?

(புதிய டெம்ப்ளேட் விரைவில் வர உள்ளது.
நினைவூட்டலுக்கு மீண்டும் நன்றி!)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அன்புடன் மலிக்கா said...
நிஜாமுதீன் அண்ணா வயிறு வலிக்கிறது [வாயும் சேர்ந்துதான்]//


கவிஞர் மலிக்கா!
தயவுசெய்து உடனே டாக்டரை அணுகவும்.
(சீரியஸா எடுத்துக்கவேணாம்.)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...