...பல்சுவை பக்கம்!

.

Sunday, October 25, 2009

சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?
சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?

நமது தமிழ்நாட்டுக்காரர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்
ஏற வந்தார். கொண்டுவந்த பெட்டியின் கணம் தாங்காமல்
அவைகளை ரயிலில் ஏற்ற சிரமப்பட்டார். அப்போது
அங்கு நின்றுகொண்டிருந்த சர்தார்ஜி, அவைகளை ஒரு
கையால் அனாயாசமாகத் தூக்கி ரயில் கம்பார்ட்மெண்ட்
உள்ளே எடுத்து வைத்தார்.

நன்றி சொன்னார் தமிழர்.

அதற்கு, "சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொல்லி, கைகளை
தோளுக்குமேல் தூக்கிக்காட்டி பெருமைப்பட்டுக்
கொண்டார் சர்தார்ஜி. (சர்தார்ஜிக்கு தமிழ் தெரியும்
போலிருக்கிறது.)

உள்ளே சென்று பெட்டிகளை மேலே லக்கேஜ் கேபினில்
வைக்க சிரமத்துடன் முற்பட்டார் தமிழர்.

அப்போதும் சர்தார்ஜியே அவற்றை லக்கேஜ் கேபினில்
வைத்துவிட்டு, கைகளை தோளுக்குமேலாகத் தூக்கி,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொன்னார்.

ஜன்னல் ஷட்டர், கன்ணாடியை மேலேதூக்க
சிரமப்பட்டபோதும் சர்தார்ஜியே தூக்கிவிட்டு,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலை செய்யும்" என்று சொன்னார்.

தமிழர் எரிச்சலாகிவிட்டாலும் அமைதியாய்
இருந்துவிட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது.
இருவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் சென்றபின்னர் தமிழர் எழுந்து ரயிலில்
உள்ள அபாயச் சங்கிலியை கையால்
பிடித்துக்கொண்டு, கஷ்டப்படுவதுபோல்
முகத்தை வைத்துக்கொண்டு, இழுப்பதுபோல்
பாவனை செய்தார்.

உடனே சர்தார்ஜி அவசரமாக எழுந்து சங்கிலியை
பலமாக இழுத்தார்; ரயில் நின்றுவிட்டது. ரயில்வே
அதிகாரிகள் வந்துவிட்டார்கள். தமிழர் தமக்கு
எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

தேவையின்றி சங்கிலியை இழுத்து ரயிலை
நிறுத்தியதற்காக சர்தார்ஜியிடம் அபராதத்
தொகையை வசூலித்துக்கொண்டு சென்றார்கள்
அதிகாரிகள். அனைத்தையும் அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தமிழர் சொன்னார்:

"அரிசிச் சோறு சாப்பிடு. மூளை பலமாகும்; அறிவு நல்லா
வேலைசெய்யும்."

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

5 comments:

எட்வின் said...

அப்போ அரிசி சாப்பிடலாங்கிறீங்க. ம்ம்ம்ம்ம். ரூம் போட்டு யோசிப்பீங்களோ :)

டவுசர் பாண்டி said...

சோக்கா கீது !! சூப்பர் !! பா !!

நிஜாம் கான் said...

நிஜாம் இது கொஞ்சம் பழசா இருந்தாலும் சொன்ன விதம் அருமை! தொடர்க.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அரிசிச் சோறு சாப்பிடு. மூளை பலமாகும்; அறிவு நல்லா
வேலைசெய்யும்."
nice punch

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி எட்வின்!

நன்றி டவுசர் பாண்டி!

நன்றி இப்படிக்கு நிஜாம்!

நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...