...பல்சுவை பக்கம்!

.

Wednesday, October 7, 2009

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)





என்னைக் கவர்ந்த பாடல் இது.
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாடல் : முத்துக்கு முத்தாக...
படம் : அன்புச் சகோதரர்கள்
பாடகர் : திரு.கண்டசாலா
பாடலின் mp3 : http://odeo.com/show/7899703/1181981/download/MuththukkuMuththaaka.mp3

பாடலின் வரி வடிவம் இதோ:

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)
=============================================
முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக
(முத்துக்கு...)

தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி
(முத்துக்கு...)

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்
அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்
சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒன்றுபட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை
(முத்துக்கு...)

ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா
(முத்துக்கு...)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Monday, October 5, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 5






அம்மா: "ராமு, கண்ணாடி முன்னாடி
நின்னுக்கிட்டு கண்ண மூடி, மூடி
என்னடா பண்ணிக்கிட்டிருக்கே?"

ராமு: "நான் தூங்கும்போது அழகா
இருக்கேனான்னு கண்ணாடியில
பார்த்துக்கிட்டு இருக்கேம்மா!"
************************************************

சேகர்: "நல்ல வேளை, நான் டில்லியில
பிறக்கல!!"

குமார்: "அதனால என்ன?"

சேகர்: "எனக்கு ஹிந்தி தெரியாது,
ரொம்ப கஷ்டமாயிருந்திருக்குமே?"
************************************************

முதல் நண்பர்: "நேற்று கோபால் வீட்டுக்கு
மதியம் ஒரு மணிக்குப் போயிருந்தேன்.
சாப்பிடறயான்னு அவன் கேட்கவேயில்லை"

இரண்டாம் நண்பர்: "அதைச் சொல்ல இப்பவும்
மதியம் ஒரு மணிக்குத்தான் எங்க வீட்டுக்கு
வரணுமா?"
***********************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
***********************************************


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, October 4, 2009

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா (பாடல்)




சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா!

இந்த பாடல் திருமதி.ப்பீ.சுசீலா அவர்கள் பாடியது.
இடம் பெற்ற படம்: வண்ணக்கிளி.
என்னைக் கவர்ந்த பாடல் இது.

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சக் கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா - இப்ப
கலகலன்னு சிரிச்சிக்கிட்டு என்னப் பாரம்மா
(சின்ன...)

கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - குங்குமம்
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - உனக்கு
கொய்யாப்பழம் பறிச்சு தாரேன் அழுகை கூடாது
(சின்ன...)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 2, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 4






நகைச்சுவை; இரசித்தவை - 4
============================
சுட்டிப்பயல் பாபு
-----------------------------
சுட்டிப்பயல் பாபு பள்ளிக்குப் போகும்போது பக்கத்துத் தெரு ஆன்ட்டி அவனிடம் பேசுகிறாள்.

ஆன்ட்டி: "பாபு உங்க வீட்டில புது பாப்பா பொறந்திருக்கே, உனக்கு தம்பியா? தங்கையா?"

பாபு : இன்னும் பேரு வைக்கலையே, அதனால தெரியல ஆன்ட்டி!!!"
******************************************************

வெ.சாம்பார்
---------------------
ராமுவும் கோபுவும் ஹோட்டலுக்கு சாப்பிடப் போகிறார்கள்.

ராமு : " மெனு போர்டில 'வெ.சாம்பார்'னு போட்டிருக்கே, வெங்காய சாம்பாரா?"

கோபு : "வெண்டைக்காய் சாம்பாரா இருக்கும்! சர்வர் இங்க வாப்பா. வெ.சாம்பார்னா
என்ன சாம்பார்?"

சர்வர் : "காய் எல்லாம் தீர்ந்து போச்சி. இது வெறும் சாம்பார்!!!"
******************************************************
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
******************************************************

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, October 1, 2009

குண்டப்பா & மண்டப்பா! (1)




குண்டப்பா & மண்டப்பா!
=======================
குண்டப்பா தனது கிராமத்திலிருந்து,
டவுனுக்கு ஓர் அரசாங்க அலுவலகத்திற்கு
ஒரு காரியமாக வந்தார்.

வேலை முடிய மதியம் ஒரு மணியாகிவிட்டது.
மதியம் 1.15 பஸ்ஸில் புறப்பட்டால் அவரது
கிராமத்திற்குப் போய் சேர ஒரு மணி நேரமாகும்.
பசி அவரது வயிற்றைக் கிள்ளி, வயிறே புண்ணாகி
விட்டது. ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம்
என்று நினைக்கும்போது, 'சாப்பாடு என்றால்
50 ரூபாய் செலவாகி விடுமே, என்ன செய்யலாம்'
என்று யோசித்தார்.

அப்போதுதான் அதே டவுனில் நான்கு தெருக்கள்
தள்ளிதான் அவரது நண்பர் மண்டப்பாவின்
வீடு இருப்பது நினைவுக்கு வர, 'சாப்பாட்டுச்
செலவை மிச்சம் பண்ணிடுவோம்' என்று
எண்ணியபடி ஐந்து நிமிடங்கள் நடந்து,
மண்டப்பாவின் வீட்டிற்குச் சென்றார்.

குண்டப்பாவைப் பார்த்த அவரது நண்பர்
மண்டப்பா, அவரிடம் பேச ஆரம்பித்தார்.
பேச ஆரம்பித்தவர்தான், பேசிக் கொண்டே
இருந்தாரே அன்றி, சாப்பிடக் கூப்பிடவே
இல்லை. குண்டப்பாவும் ஒரு மணி
நேரமாகப் பொறுத்துப் பார்த்து விட்டார்.
மணியும் இரண்டைத் தாண்டி விட்டது.

குண்டப்பா எழுந்து கொண்டார்.
"அப்ப நான் ஊருக்குப் புறப்படுகிறேன்"
என்றார்.

அதற்கு, "எங்க வீட்டில சாப்பிடச்
சொன்னா சாப்பிடவாப் போறீங்க?"
என்று கேட்டார் மண்டப்பா.

"மாட்டேன்னா நீங்க விடவாப் போறீங்க?"
என்று திருப்பிக் கேட்டுக் கொண்டு
அங்கேயே நின்று கொண்டிருந்தார் குண்டப்பா.

'ஆஹா... இவுரு நம்ம வீட்டுல சாப்பிடாமப்
போக மாட்டாரு போலருக்கே, எப்படி இவர
துரத்தலாம்' என்று யோசித்த மண்டப்பா,
சமாளிப்பாக, "அப்படி நீங்க நம்ம
வீட்டுல சாப்பிட்டாலும் என் ரெண்டு
பிள்ளைங்களுக்கும் ஐம்பது, ஐம்பது
ரூபாய் அன்பளிப்பு கொடுக்காமயா
போயிடப் போறீங்க?" என்று கோர்த்து
வாங்கினார்.

'ஹோட்டல்ல சாப்பிட்டா ஐம்பது ரூபாய்தானே,
இந்த ஆளு நூறு ரூபாய்க்கு அடி போடுறானே'
என்று பயந்தாலும் குண்டப்பா, "என்னங்க
இப்படிச் சொல்லிட்டீங்க? உங்க பிள்ளைங்க
தங்கம்ல? உங்க பிள்ளைங்களும் உங்க மாதிரியில?
நான் பணம் கொடுத்தாலும் அவங்க
வாங்கவாப் போறாங்க? நீங்க
அப்படியா பிள்ளைங்கள வளர்த்திருக்கீங்க?"
என்று மடக்கினார்.

இவ்வளவு பேச்சு நடந்த பிறகும் குண்டப்பா
அந்த வீட்டில் சாப்பிட்டிருப்பாரா, மாட்டாரா?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா (2) இங்கே!

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, September 29, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 3

என்னை யாரென்று...?
=====================
மாணவன்: "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?"

ஆசிரியர் : "டேய் யார்ரா அவன் கிளாசிலே பாட்டு பாடுறது?"

மாணவன்: "இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்?"

**********************************************************


டீ.வி.யை திட்டுவது என்?
=========================

பேரன் : "ட்டீ.வி! நீ நாசமாப்போக! நீ கட்டையிலப்போக! நீ பாழாப்போக!"

பாட்டி : "டேய் சீனு! ஏண்டா ட்டீ.வி.யை திட்டிக்கிட்டு இருக்கே?"

பேரன் : "நீதானே பாட்டி ட்டீ.வி.யை வையின்னு சொன்னே. அதுதான் ட்டீ.வி.யை வஞ்சிக்கிட்டு இருக்கேன்.


**********************************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, September 26, 2009

இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!




இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!

ஒரு மாலை நேரம். ஆஃபீஸிலிருந்து கணவன் தனது
மனைவிக்கு ஃபோன் செய்து, "நீ செய்கிற மெதுவடை
சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும். இன்னும் ஒரு மணி
நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மெதுவடைகள்
செய்துவை" என்றான். மனைவி "சரி" என்றாள்.

அதுபோலவே ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்த கணவன், மனைவியிடம் "மெதுவடை எல்லாத்தையும் எடுத்து வா" என்றான். மனைவி ஒரு தட்டில் ஒரு மெதுவடையும் சட்னியும் கொண்டுவந்து கணவனிடம் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்து அதிர்ச்சியான கணவன், "என்னடி, ஒரு வடைதான் இருக்கு.மற்றதெல்லாம் எங்கே?" என்று கேட்டான்.

அதற்கு மனைவி , "முதலில் ரெண்டு வடை சுட்டேன்.
நல்லாயிருக்கான்ன சாப்பிட்டுப் பார்த்தேன்.
அப்புறம் ரெண்டு வடை சுட்டேன். நல்லாயிருக்கான்னு
சாப்பிட்டுப் பார்த்தேன். அப்புறம் ரெண்டு வடை சுட்டேன்.
அதையும் சாப்பிட்டு விட்டேன். இப்படி எல்லா
வடையையும் சாப்பிட்டுவிட்டு இந்த ஒரு வடையை
மட்டும் உங்களுக்காக ஆசையோட எடுத்து வச்சிருக்கேன்" என்றாள்.

அந்தக் கணவன், "அடப்பாவி! எப்படி எல்லா வடையையும் சாப்பிட்டே!!!"
என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

அதற்கு "சிம்பிள்! முதல்ல ஒரு வடையை எடுத்தேன்.
ரெண்டா பிய்த்தேன்.முதலில் ஒரு துண்டை வாயில
போட்டு மென்னு சாப்பிட்டேன். அப்புறம் ரெண்டாவது
துண்டை எடுத்தேன். வாயில போட்டு மென்னு
சாப்பிட்டேன்.. அவ்வளவுதான்" என்று அந்த தட்டில்
மீதமிருந்த ஒரு வடையையும் சாப்பிட்டுக்
காட்டினாளாம் மனைவி.

இப்படிப்பட்ட மனைவிகள் ஒரு சிலர் (!?) இருக்கிறார்கள்.
கணவன்களே, ஜாக்கிரதை.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, September 24, 2009

ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)


ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் திருமதி
ஷோபனா ரவி, திரு ரவி தயாரித்து,
திரு. எஸ்.வி.சேகர் கதாநாயகனாக
நடித்த 'ஸ்பரிசம்' என்ற படத்தில் வரும்
பாடல். திரு.எஸ்.ப்பீ.பாலசுப்ரமணியன்
மற்றும் ஒரு பெண் குரல் [எஸ்.ப்பீ.
ஷைலஜா(?)] பாடியது.

என்னைக் கவர்ந்த பாடல் இது. பாடல்
பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்தவர்கள்,
பாடலின் ஒலி (ஆடியோ) வைத்துள்ளவர்கள்
தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டம்
இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து (பாடல்):

ஆண்:
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'உன்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்

பெண்:
இந்திரப் பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறுக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...

பெண்:
காலக் கதவினை மெல்லத் திறந்து
பப்பா... பப்பா... பப்பா...
கடந்த பாதையை மறந்து...
காலக் கதவினை மெல்லத் திறந்து
கடந்த பாதையை மறந்து
இந்த கணக்கில் நாம் பிறந்து
... வளர்ந்து கலந்தோம்... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்


பாடலின் மெட்டு நன்றாக ஞாபகம் உள்ளது.
சில வார்த்தைகள் மட்டும் பிழையாக
இருக்கலாம்.

[கேட்டவை]

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...