...பல்சுவை பக்கம்!

.

Thursday, December 31, 2015

மூக்குடைப்பு போட்டி - பதிவு #125

மூக்குடைப்பு போட்டி - பதிவு #125

சூப்பர் நாவல் 1986 இதழ் 'மூக்குடைப்பு போட்டி அல்லது கால் வாரல் போட்டி'யில் பரிசு பெற்று பிரசுரமானது.


Click for Options

நயாஸ். எங்க ஊரு நண்பன். [பெயர் மாற்றப்பட்டுள்ளது.]  எனது க்ளாஸ்மேட்கூட. சில விஷயங்களைக் கூறிவிட்டு 
அறிவுஜீவி மாதிரி 'That is Nayas' என்று தன்னை, 
தன் தலையை தட்டிக் கொள்வான். 


ஒருமுறை அப்ளிகேஷன் ஒன்றை அனுப்புகையில் Post Office-ல் என்னிடம்  'அதை அப்படி எழுது, இதை இப்படி வை, இந்த மாதிரி ஒட்டு' என்று சொல்லிக் கொண்டே அவனது application-ஐயும் ஒட்டி முடித்தான். அவன் application form  தவிர மற்றதெல்லாம் உள்ளே வைத்து கவரை ஒட்டிவிட்டான். Application Form  மட்டும் வெளியில். அவனிடம் அதை எடுத்துக் காட்டினேன். 


"ச்சே, நான் ஒரு மடையன்" என்று தலையில் தட்டிக் கொண்டான். நான் உடனே, "அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஏன்னா, That is Nayas" என்றேன். அவன் முகம் போன போக்கு...

 இதே இதழில் 'சுபா பதில்கள்' பகுதியில் வந்த எனது கேள்வி + சுபா பதில்:

Click for Options

கேள்வி: தமிழ் - மகளா? அன்னையா?

சுபா பதில்: பயிலும்வரை, நிலா சோறூட்டும் அன்னை!
கைவந்த பின், அடங்கி நடக்கும் மகள்!!


இதே இதழில் பிரசுரமான பரிசுபெற்ற எனது கவிதை:

இங்கு சுட்டுங்கள்: "இன்று - நண்பா!"



அந்த இதழ் அட்டைப்படம்:

Click for Options
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, February 7, 2015

விமரிசனப் போட்டிப் பரிசு! #124

விமரிசனப் போட்டிப் பரிசு! #124

  பதிவர் திலகம் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் புதுமையான போட்டி ஒன்றினைத் தொடராக நடத்தினார். அவர் எழுதிய கதைகளிலிருந்து 40 கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரம் ஒரு சிறுகதைவீதம் 40 வாரங்கள் வெளியிட்டு, விமரிசனப் போட்டியும் வைத்து பல பரிசுகளையும் வழங்கினார். இப்போட்டி, 'பதிவுலகின் புதுமை' என்று பலராலும் போற்றப்பட்டது.


  சுமார் 32 வாரங்கள்வரை அதன் நடுவர் யாரென வெளிப்படுத்தாமலே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பரிசுப் பணம் ஒவ்வொரு 10 கதைகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பொழுதிலேயே அனைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டதை, பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

     இந்தப் போட்டிகளில் பல பதிவர்கள் கலந்துகொண்டு தொடர்ந்து பரிசுகளை வென்று சாதனைகள் பல புரிந்தார்கள். எனக்கும் இரு போட்டிகளில் பரிசுகள் கிடைத்தன. அவற்றுள் 'உடம்பெல்லாம் உப்புச்சீடை' என்ற கதைக்கு நான் எழுதி, பரிசு பெற்ற விமரிசனத்தை கீழே படிக்கலாம்.

     அந்தச் சிறுகதைக்கான இணைப்பு:
'உடம்பெல்லாம் உப்புச்சீடை'

     அந்தச் சிறுகதைக்கான பரிசுபெற்ற எனது விமரிசனம் படிக்க  இணைப்பு:
'பரிசுபெற்ற விமரிசனம்'

      கீழே அந்த விமரிசனம்:



    

இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள்


இருவர்  



அதில் ஒருவர்



திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்  
அவர்கள்





வலைத்தளம்: 

”நிஜாம் பக்கம்”






இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்  


 அவர்களின் விமர்சனம் இதோ:





*  'உடம்பெல்லாம் உப்புச்சீடை' என்கிற இக்கதையின் தலைப்பே வித்தியாசமானது. முகத்திலோ, உடலின் மற்ற பாகங்களிலோ, அல்லது அனைத்து இடங்களிலுமோ சிலருக்கு சருமத்தில் முண்டும் முடுச்சுமாக கொப்புளங்கள் இருப்பதுண்டு. அவற்றை பொதுவாக, 'கொப்புளம்' என்றுதான் நாமெல்லாம் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், கதாசிரியரோ அதை 'உப்புச் சீடை' என்று குறிப்பிடுவது, அவரின் 'அதீத கற்பனையின் உச்சம்' எனலாம். 



* 'உடம்பெல்லாம் உப்புச்சீடை' கதை உணர்வுப்பூர்வமாக இருந்தது. 



புகைவண்டி, பேருந்து, விமானம் போன்ற பொதுசுமை கடத்திகளில் (Public Carrier)  நாம் பயணம் செய்யும்போது உடன் வரும் சக பயணிகளை நாம் தேர்வு செய்ய இயலாது. "நாம் ஒரு காரணமாக பயணம் மேற்கொள்ளுதல் போலவே அவரும் ஏதோ ஒரு காரியமாக பயணம் செய்கிறார்" என்பதை நாம் ஏனோ யோசிக்க மறந்துவிடுகிறோம். 




* அவரும்  சக பயணி; அவரும் சக உயிர் என்பதை  நாம் நமது வசதிக்காக மறந்துவிடுகிறோம்.  "இறைவனது  படைப்பில் அனைவரும் சமம், அதோடு எவ்வுயிரும் அவனது படைப்பே" என்பதை வலியுறுத்தும் படைப்பு இக்கதை!



*   பட்டாபி, பங்கஜம் மற்றும் குழந்தைகள் ஐவரும் ரயிலில் ஏறியதும் ஆரம்பமாகும் மிதமான கதையோட்டம், பயங்கரமான உருவம், தன்னை முறைத்துப் பார்த்ததினால் பயந்து ஓடி வந்ததாய் விமலா சொன்னதும் விரைவான கதையோட்டமாக மாறுகின்றது.


 * ஆரம்பம் முதலே அந்த நபரை பயங்கரமான உருவம், கை, கால்கள், உடம்பு எங்கெங்கும் கொப்புளங்கள் என்று வர்ணனை, அந்த உருவம் என்றும் 'அது' என்ற அஃறிணை வர்ணிப்பு என்றெல்லாம் அந்த நபரை கதாசிரியர் குறிப்பிடும்போது அந்த உருவத்தின்பால் அல்லது உருவத்தின்மேல் நமக்கும் அருவெறுப்பை புகுத்தி விட்டு விடுகிறார் கதாசிரியர். இது அவரின் யுக்தி அல்லது அவரின் வெற்றி!

 

இறைவன் யாரையும் தேவையில்லாமல் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியதி இறைவனால் படைக்கப் பட்டிருக்கின்றது. அதனால், யாராலும் அவற்றிலிருந்து தப்பவே முடியாது. இதை உணர்பவர்கள், தப்ப முடியாமல் தவிப்பவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை கண்டெடுப்பதுண்டுதான்.



* ஆனால், அந்த வழிகளும் கூட இறைவனால் வகுக்கப்பட்டதுதான். இன்னும் சில நேரங்களில், இறைவனை யாசிப்பதிலிருந்தும் அவனிடம் பிரார்த்திப்பதிலிருந்தும் இறைவனால் மீட்கப்படலாம். அது அவனின் திருவிளையாடல்களில் ஒன்று.



* இறைவனை நம்புபவர்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது. நம்மாலேயே அனைத்தும் நடக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. மற்றவர்களால் நாம் எப்போதாவது உதவிபெறப்படலாம்.



* வெளித் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுதலும் மிகத் தவறு ஆகும். இங்கே பட்டாபி மறந்து வைத்துவிட்டு வந்த அவரது தந்தையின் அஸ்திக் கலயத்தை, அவரால் வெறுக்கப்பட்ட அந்த மனிதர் தனது தொடர் பயணத்தையும் துறந்துவிட்டு பட்டாபியைத் தேடி எடுத்து வந்து தருகின்றார். ஆக, இங்கும் இறைவனின் விளையாட்டைக் காணலாம்.



* புகைவண்டி மற்றும் வாழ்க்கை - இவை இரண்டும் ஏறக்குறைய ஒன்றேதான். புகைவண்டியும் பயணம்; வாழ்க்கையும் பயணம். புகைவண்டி ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்கிறது. வாழ்க்கையும் பிறப்பில் ஆரம்பமாகி இறப்பில் சென்று முடிவடைகிறது.


* இந்தக் கதையும் புகைவண்டிப் போலத்தான். வளைந்து, நெளிந்து ஓடுகின்றது, பல திருப்பங்களுடன். அந்தப் பெரியவரை பயங்கரத் தோற்றமுள்ளவரா ஆரம்பத்தில் காட்டி, நம்மையும் அருவெறுப்பு கொள்ள வைக்கிறார், கதை சொல்லி. (Narrator).

* பின்  குழந்தை ரவியிடம் அன்பு பாராட்டி, பேசி மகிழ்ந்து, ஐஸ் கிரீம் வாங்கித் தந்து, சக மனிதரிடத்தில் அன்பு காட்டும் மனித நேயம் மிக்கவராக காட்டி புருவம் உயர்த்த வைக்கிறார் நம்மை.



* அடுத்து, தன் வழியுண்டு தானுண்டு என்று சகிப்புத் தன்மையுள்ளவராய் ஒதுங்கி கொள்கிறார். 



* அடுத்ததாக, அஸ்திக் கலயத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் உதவி செய்யும் பரோபகாரியாய் மிளிர்கிறார். 


* பெரிய வித்வான், பண்டிதர் , சிரியர் என அவரது அறிவு வெளிச்சம் கதை முழுவது பரவி, அவரது மைனஸ் பாயிண்ட்கள் அனைத்தும் அடிபட்டுப் போகின்றன கதைசொல்லும் சாமர்த்தியத்தினால். 



* ஆகக் கூடி, மன்னிப்பு கேட்கும் பட்டாபி குடும்பத்தையும் மன்னித்து, அருளாசியுடன் நல்லுபதேசம் செய்து, அருளுரை அளிக்கிறார்.    



இக்கதை ஒரு மனிதர் என்று காட்டி, அவர் மகா மனிதர் என்று முடிகின்றது. அதோடு, மனதினில் பல இறை சார்ந்த உணர்வுகளை மனிதர்களின்பால் உருவாக்கியிருக்கும் என்றால் மிகையில்லை.


-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


 


 

மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




    

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, January 1, 2015

சுஜாதாவிடம் சில கேள்விகள் ~ 2 (#123)

சுஜாதாவிடம் சில கேள்விகள் ~2

திரு. சுஜாதா அவர்களிடம் நான் கேட்ட கேள்வியும்
அவரது பதிலும்...



  ♦குத்துமதிப்பாக அதிகபட்சம் எத்தனை 'சுடோகு'
தயார் செய்யலாம்?

சுஜாதா பதில்:
  ஒன்பதுக்கு ஒன்பது சுடோகு. என் கணக்குப்படி
6,670,903,752,021,072,936,960 தயார் செய்யலாம்.

[நன்றி : குங்குமம் 06/09/2007]

"சுஜாதாவிடம் சில கேள்விகள் ~ 1 படிக்க:  கீழே சுட்டுங்கள்:

www.nizampakkam.blogspot.com/2012/05/sujaathaa100-100.html

நன்றி:
குங்குமம் வார இதழ் &
சுஜாதா சார்!


.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, January 1, 2014

அம்மா சொன்ன கதை! #122

புத்தாண்டுப் பதிவு!

ஒரு நாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சோற்றில் கருப்பு நிற அரிசி ஒன்று இருந்தது. அதைக் கையில் எடுத்து சாப்பிடுமுன் சில சிந்தனைகள் தோன்றின.


இக்காலங்களில் நவீன அரிசி ஆலைகளில் இருந்து சாக்கு மற்றும் துணி பைகளில் விற்பனைக்கு வெளிவரும் அரிசி மூட்டையில் மேல் பாகம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மட்டும்தான் இருக்கும். முன்பெல்லாம் அரிசியுடனே ஒரு சில நெல்மணிகள், சிறிய கற்கள், சிறு துண்டு களிமண் கட்டிகள், முழுமைபெறாத அரிசி பதர்கள், சில பல வைக்கோல் சக்கைகள் இவற்றோடு கருப்பு நிற அரிசிகளும் இரண்டற கலந்து கட்டி வரும். இந்த கருநிற அரிசி பதர் அல்ல; அரிசியேதான்.

சிறு வயதில் ஒருநாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இதேபோல்தான் சாப்பாட்டில் இருந்த ஒரு கருப்பு சோற்றினை
வெளியில் எடுத்துப் போட எத்தனிக்கும்போது, எங்கள் அம்மா சொன்னார்கள்:

"இந்த கருப்பு சோறு சாப்பிடு; தூக்கி வெளியில் போடக்கூடாது. ஏனென்றால் இந்தக் கருப்பு சோறுக்கு ஒரு கதை இருக்கிறது." என்று சொல்லிவிட்டு கதையையும் சொன்னார்கள்.


ஒரு நாள் ஒரு கருப்பு அரிசி (சோறு) கடவுளிடம் கேட்டதாம், "கடவுளே, மற்ற அரிசியெல்லாம் வெள்ளையாக இருக்கின்றன. என்னைமட்டும் கன்னங்கரேல் என்று கருப்பாகப் படைத்துவிட்டாயே?" என்று.

"கருப்பரசியே! நீ கருப்பாய் இருப்பதற்காக கவலைப்பட்டு, மனம் ஏங்கவேண்டாம். நீ கருப்பாக இருந்தாலும் உன்னை சமைத்துப் பரிமாறும் தட்டில் கருப்பு சோறாக இருக்கும்போது, உன்னைப் பார்ப்பவர்கள் உன்னைத்தான் முதலில் எடுத்துச் சாப்பிடுவார்கள். அதனால் உனக்கு வருத்தத்திற்கு பதில் மகிழ்ச்சிதான் ஏற்படும். சந்தோஷமாகப் போ!" என்று பதில் தந்து அந்த கருப்பு அரிசியை வாழ்த்தி அனுப்பினாராம் கடவுள். அன்றிலிருந்து, சாப்பாட்டில் கருப்பு அரிசி இருந்தால் முதலில் அதையே நாம் சாப்பிட வேண்டும்.

இவ்வாறாக எங்கள் அம்மா சொன்னதும் நான் உடனே அந்த கருப்பு அரிசியைக் கீழே போடாமல் உடனே சாப்பிட்டு விட்டேன்.

இதுதான் அம்மா சொன்ன கதை; எங்கள் அம்மா சொன்ன கதை.



அன்பன்,

அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

கீழை அ. கதிர்வேல் ஜோக்ஸ்! + குடந்தையூரார் புதினம்! #121


நகைச்சுவைப் பேரரசர், எழுத்தாளர் திரு. கீழை அ. கதிர்வேல் அண்ணன் அவர்கள் பல்லாண்டு காலமாக  
பத்திரிகைகளில் எழுதிய ஜோக்குளிலிருந்து 400
ஜோக்குகளைத் தொகுத்து 'நகைச்சுவை நானூறு'
என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். 

இந்த நகைச்சுவைகளைப் படிக்கப் படிக்க மனபாரமெல்லாம் 
குறையும். டென்ஷன் விலகும். மனம் இலேசாகும். 
நோய்கள் ஓடி ஒளி(ழி)யும். மீண்டும் மீண்டும் படிக்கலாம். 
இந் நூலில் அனைத்துத் துறைகளிலும் பொதிந்துள்ள 
நகைச்சுவையை வெளிக் கொண்டு வந்து தருகிறார் 
அண்ணன் கீழையார். 

நூலுக்கு பாக்கியம் ராமசாமி, லேனா தமிழ்வாணன், பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர் அணிந்துரை தந்துள்ளார்கள்.

நூலிலிருந்து சில ஜோக்குகள்:   



[படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.]


நூல் : நகைச்சுவை நானூறு

ஆசிரியர் : கீழை அ. கதிர்வேல்
வெளியீடு: சிரிப்பரங்கம்,
                       அம்பத்தூர்,
                       சென்னை.
நாள்           : 12/01/2014



கீழை அ. கதிர்வேல் அண்ணன் அவர்கள் எனக்கு அனுப்பித் தந்த அவரது புகைப்படம்:



*****     *****     *****     *****     *****     *****     *****     *****
 'இளமை எழுதும் கவிதை நீ' புதினம்!


நண்பர் குடந்தையூர் ஆர். வி. சரவணன் அவர்கள் எழுதிய 'இளமை எழுதும் கவிதை நீ' தொடர்கதையை புத்தகமாக வெளியிடுகிறார்.

நாள் : 05/01/2014

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்.



இந்தக் கதை காதல், கல்லூரி, கலாட்டா, கலகலா என்று கலந்து கட்டி இருக்கின்றது.

இந்நூலுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களும் பதிவர் முனைவர் எஸ். சங்கர் அவர்களும் பதிவர் அரசன் அவர்களும் மதிப்புரைகள் வழங்கியுள்ளனர்.

இரு நூல்களையும் படித்துப் பாருங்கள் நண்பர்களே!

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

நகைச்சுவை; இரசித்தவை (19) #120

1.  "பரிட்சை எழுத வரும்போது கையில என்னடா கட்டு?"

"விழுந்து விழுந்து படிச்சதுல கையில அடிபட்ருச்சி சார்!"

(மாணவர்கள் விழிப்புடன் படிக்கவும்.)


==============================================================
2. மனைவி: "நான் வரும்போது ஏன் கண்ணாடி போட்டுக்கறீங்க?"

கணவன்: "தலைவலி வரும்போது கண்ணாடி போட்டுக்கங்கன்னு டாக்டர்தான் சொன்னார்."


-கீழை அ. கதிர்வேல்.
[ஆனந்த விகடன் 1988 தீபாவளி சிறப்பிதழ்.]
=============================================================
3.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/46161_584784781547510_332092284_n.jpg
 ஹா... ஹா...

"ஹலோ மன்னா, போர் முடிந்து விட்டதா?"

"நான் ரன்னிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன் அமைச்சரே!"

-வீ.விஷ்ணுகுமார்
(தினகரன் வசந்தம் 23.12.2012)

============================================================
4.  "சாப்பாடு உனக்கு மட்டும்தானே, பின்ன ஏன் பார்சல் வாங்கிட்டு வீட்ல போயி சாப்பிடுறே?"

"என்னை ஹோட்டல்லயே சாப்பிடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.  ஹா...ஹா...

நீதிபதி: "நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா?"

குற்றவாளி: "எனக்காக வாதாடின வக்கீல், உண்மையிலேயே

பி.எல். படிச்சிருக்காரான்னு எனக்குத் தெரியணும்!"

-போடி. ப்ரியபாரதி
(1988)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6.  ஹா...ஹா...

"வரப்போகும் பொதுத் தேர்தலில், உங்கள் கட்சி சார்பாகப்
போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா?"

"ம்... ம்..."

"தேர்தலில் எதிர்கட்சிகளுடன் கூட்டு உண்டா?"

"ஊஹூம்."

"தனித்துப் போட்டியிட்டால் தங்களால் மெஜாரிட்டி
பலம் பெறமுடியுமென்று நம்புகிறீர்களா?"

"ம்... ம்..."

"மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் கூட்டு
மந்திரி சபை அமைக்கச் சம்மதிப்பீர்களா?"

"ம்... ம்..."

உங்கள் கட்சிக்குள் ஏதோ 'கசமுசா'வென்றும்
தேர்தலுக்குள் பிளவுபடும் என்றும் சொல்கிறார்களே?"

"ஊஹூம்..."

"உங்களின் மனம் திறந்த பேட்டிக்கு நன்றி!"

- படுதலம் சுகுமாரன்

(1988)


--------------------------------------------------------------------------------------

7.  ஹா...ஹா...

"எதுக்கு டாக்டர் உங்க கையையே நாடி பிடிச்சுப்
பார்த்திட்டிருக்கீங்க?"

"டச் விட்டுப் போயிடாம இருக்கத்தான்!"

- எம். பூங்கோதை
(1988)


-------------------------------------------------------------------------------------------
8.  ஹா...ஹா...

"ஆப்பரேஷன் தியேட்டருக்குள் துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேக்குதே?"

"மிலிட்டரி டாக்டர் ஆச்சே... ஆப்பரேசன்போது இறந்து போனா
மரியாதை பண்ணுவார்!"

- அம்பை தேவா
(1988)


---------------------------------------------------------------------------------------------
9.  ஹா...ஹா...

"என்ன டாக்டர் இது... பணம் கொடுக்கும்போது கிச்சுகிச்சு செய்றீங்க?"

"சிரிச்ச முகத்தோட பீஸ் கொடுத்தால்தான் நான் வாங்கிப்பேன்!"

- வி. சாரதி டேச்சு
(1988)


------------------------------------------------------------------------------------------
10.  ஹா...ஹா...

"தலைவியோட சுயரூபம் உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா? யார் நீங்க?"

"அவங்களுக்கு நடிகையா இருந்தபோது, அவங்களுக்கு மேக்கப் மேனாக
இருந்தவன்!"

- ஞா. ஞானமுத்து (1988)


----------------------------------------------------------------------------------------------
 11.  ஹாஹா...!

"நம்ம தலைவர் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊருல 2 பேரை, பேர் சொல்லி கூப்பிட்டு, தோள்ல கை போட்டு பேசுவாரு!"

"உண்மையாவா?"

"எந்த ஊருலயும் 2 பேருக்கு மேலே நம்ம கட்சியில ஆள் இல்லையே!"

-டி.சேகர், திருத்துறைப்பூண்டி.


------------------------------------------------------------------------------------------------
12.  ஹா... ஹா...

"அஞ்சே ஆயிரம்தான் செலவு பண்ணேன், தரகர் பஞ்சாயத்து, மேட்ரிமோனியல் எந்த செலவும் இல்லாமல் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன்"

"எப்படி?"

"பொண்ணுக்கு 'மொபைல் ஃபோன்' வாங்கிக் கொடுத்தேன்!"

-பர்வீன் யூனுஸ்.
(ஆனந்த விகடன், 19.12.2012)

=> இது நகைச்சுவைதான். ஆனால்,எவ்வளவு பெரிய கொடுமை?<=


-----------------------------------------------------------------------------------------------
13.  ஹா... ஹா...!

"ஜாமீன் எடுக்கப் போன எங்களைத் தலைவர் கண்டபடி திட்டிட்டார்!"

"என்னவாம்?"

" '13 வருஷமா எங்கடா போனீங்க?'ன்னுதான்!"

-சி.சாமிநாதன்
(ஆனந்த விகடன், 07.11.2012)


-------------------------------------------------------------------------------------------------
14.  "அந்த சாமியார் சொன்னது உடனே பலிச்சுதா? எப்படி?"

" 'புது வாகனம் வாங்குவே'ன்னு சொன்னார். அவரைப் பார்த்துட்டு வெளியே வந்தா, என் காரைக் காணோம்."

-அ.ரியாஸ், சேலம்.
(குங்குமம், 19.11.2012)


-------------------------------------------------------------------------------------------------
15.  "அடுத்து நம்ம ஆட்சிதான். ஏன் தலைவரே கவலைப்படுறீங்க"

"அதுக்குள்ளே மணல், நிலக்கரி, கிரானைட் எல்லாத்தையுள் காலி பண்ணிடுவாங்க போலிருக்கே!"

-சிக்ஸ் முகம்
(ஆனந்த விகடன் 21.11.2012)


----------------------------------------------------------------------------------------------
 16.  "நம்ம தலைவருக்கு திறமை போதாது."

"ஏன்?"

"பேசி தூங்க வைச்சவருக்கு எழுப்பத் தெரியலை!"


----------------------------------------------------------------------------------------------
17.   "இந்த ஊர்லயே ரொம்ப மோசமான ஹோட்டல் எங்கயிருக்கு?"

"ஏன் கேட்குறீங்க?"

"பக்கத்திலேயே கிளினிக் ஆரம்பிக்கலாம்னுதான்!"


------------------------------------------------------------------------------------------

18.  "நான் 'அழகாயிருக்கேன்'னு பொய்தானே சொன்னீங்க?"

"உண்மைதான் உமா!"


----------------------------------------------------------------------------------------
19.  "இப்போதெல்லாம் பாட்டு பாடி, பரிசு பெற வருவதில்லையே, ஏன் புலவரே?"

"Blog எழுதவே நேரம் போதவில்லை மன்னா!"


------------------------------------------------------------------------------------------
2013-ல் எனது முகநூல் சுவரில் பதிந்ததின் தொகுப்புதான் இது.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Tuesday, December 31, 2013

குண்டப்பா & மண்டப்பா (11) #119

2013 நிறைவுப் பதிவு!
குண்டப்பா & மண்டப்பா 11.

ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. குண்டப்பா இவரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துக்கொண்டுவிட்டு, மண்டப்பாவிடம் ஒரு கேள்வி கேட்டார்.

குண்டப்பா: "மிஸ்டர் மண்டப்பா. உங்க குவாலிஃபிகேஷன்லாம் பார்த்தேன். இப்ப உங்களிடம் ஒரே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கவா? அல்லது ஈஸியான 100 கேள்விகள் கேட்கவா? உங்க சாய்ஸ் என்ன?"

மண்டப்பா: (மனதினுள்: 'அடடா வம்பாப் போச்சே, 100 ஈஸியான கேள்விதான், இருந்தாலும் ஒரு கேள்வி மட்டுமாவது பதில் தெரியாவிட்டால்கூட , வேலை கிடைக்காதே, இப்ப என்ன செய்யலாம்?')  "ம்க்கும்... சார் ஒரே ஒரு அந்தக் கஷ்டமான கேள்வியையே கேளுங்க சார்!" 

குண்டப்பா: "மிஸ்டர் மண்டப்பா! 6 தலை, 3 கண்கள்,  2 தும்பிக்கை, 18 கால்கள், 3 வால் கொண்ட ஒரு மிருகத்தின் பெயர் என்ன,  சொல்லுங்க!!!"

மண்டப்பா: (மனதினுள்: 'யார்ரா இவன் கிறுக்கனாயிருப்பாம்போலிருக்கே!!!') "சார், அந்த மிருகத்தின் பெயர் 'ஆதனை'!"  உற்சாகமாகப் பதில் சொன்னார் மண்டப்பா!

குண்டப்பா: "மிஸ்டர் மண்டப்பா, எப்படி 'ஆதனை'ன்னு நிச்சயமா சொல்றீங்க?"  

மண்டப்பா: "சார் ஒரே ஒரு கேள்வி, ஒரே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கறேன்னு சொல்லிட்டு, இப்ப ரெண்டாவதா கேள்வி கேட்குறீங்களே சார்?"

குண்டப்பா பதில் சொல்லமுடியாமல், அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் கையெழுத்துப் போட்டு நீட்டினார் மண்டப்பாவிடம்.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

குண்டப்பா; மண்டப்பா (10) #118

2013 நிறைவுப் பதிவு!
குண்டப்பா; மண்டப்பா 10

சில மாதங்களுக்கு முன் மண்டப்பாவை நோஸ்கட் செய்துவிட்டார்  குண்டப்பா. அவரை எப்படியாவது பழி வாங்கிடணும் என்று காத்திருந்தார் மண்டப்பா.

ஒரு நாள். அந்த ஊரில் ஒரு சிறப்பான நாள் ஒன்று வந்தது. அதாவது மிகப் பெரும் கண்காட்சி, சந்தை மற்றும் பல்வகை விளையாட்டுக்கள் - போட்டிகள் என்று ஊரே பரபரப்பாகயிருந்தது.

குண்டப்பாவும் மண்டப்பாவும் வேடிக்கை பார்க்க போனார்கள். அப்போது குண்டப்பாவுக்குத் தெரியாமல் பாட்டுப் போட்டியில் குண்டப்பாவின் பெயரைக் கொடுத்துவிட்டு வந்துவிட்ட மண்டப்பா எதுவும் அறியாதவர்போல் குண்டப்பாவுடன் சேர்ந்துகொண்டார்.



திடீரென்று "பாட்டுப் போட்டியில் அடுத்து பாடவருகிறார் குண்டப்பா!" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மைக்கில் அறிவிப்பு செய்பவர். குண்டப்பா முழி, முழியென்று விழிக்கவும் மண்டப்பாவோ குண்டப்பாவை நைசாகப் பேசி மேடைக்குக் கொண்டு சென்றுவிட்டார். வேறு வழியில்லாத நிலையில் (வழியைத்தான் மண்டப்பா அடைத்துக் கொண்டு நிற்கிறாரே!)  மேடையில் ஏறி ஏதோ ஒரு பாட்டையும் பாட ஆரம்பித்துவிட்டார் குண்டப்பா.

எப்படியோ பாடி முடித்து குண்டப்பா மேடையிலிருந்து இறங்குவதற்குள் மண்டப்பா, "ஒன்ஸ் மோர்!" என்று சப்தமாய் குரல் கொடுத்தார்.

மண்டப்பா குரல் விட்டதைத் தொடர்ந்து, மற்ற பார்வையாளர்களும் அவ்வாறே  கத்த ஆரம்பித்துவிட்டனர். இதை எதிர்பாக்கவில்லை குண்டப்பா. 'நம்ம பாட்டை இவ்வளவு பேர் விரும்பிக் கேட்கும்போது மறுபடியும் பாடுவோமே!' என்று மகிழ்ந்து அந்தப் பாட்டை திரும்பவும் பாடினார் குண்டப்பா.

பாடி முடிக்கவும் மறுபடியும் "ஒன்ஸ் மோர்" என்று குரல் விட்டனர் மண்டப்பாவும் மற்றவர்களும். "அடடே" என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் பாடினார் குண்டப்பா.


பாடி முடித்ததும் இப்பவும் அனைவரும் "ஒன்ஸ் மோர்" என்றனர். குண்டப்பா சலிப்புற்றவராக, "ஏன் இப்படி திரும்பத் திரும்பப் பாடச் சொல்றீங்க?" என்று கேட்டார். 


"நீங்க அந்தப் பாட்டை ஒழுங்காப் பாடாதவரைக்கும் உங்கள விடமாட்டோம்" என்று நக்கலாகச் சொன்னார் மண்டப்பா.

அதைக் கேட்டு மனம் நொந்துபோய், மண்டப்பாவைத் திட்டிக் கொண்டே வீடு திரும்பினார் குண்டப்பா.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...