...பல்சுவை பக்கம்!

.

Friday, October 30, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 2)




16. அதிகமாய்ச் சாப்பிட்டால் உணவும் வெறுத்துப் போய்விடும்.


17. பணக்காரனாய் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியதில்லை; தேவைகளைக்
குறைத்தாலே போதும்.


18. இன்று நாம் செய்த நன்மை, நாளை நமக்குக் கிடைக்கப் போகும் இன்பமாகும்.


19. அதிகம் பேசினால் அதிகத் தவறு செய்ய நேரிடும்.


20. ஒவ்வொரு சாலைக்கும் இரு திசைகள் உண்டு.
கவனம் இருந்தால், வெற்றி தரும்
சாலையில் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.


21. உண்மையான உழைப்பில்தான் வாழ்க்கை இருக்கிறது.


22. தானத்தை நிதானமாய் வழங்கிக் கொண்டே இருக்கும் கைக்குச் சலிப்பே இராது.


23. பறவைகளுக்குப் பயந்து விதைக்காமல் இருக்க வேண்டாம்.


24. எப்போதும் சலிப்பில்லாமல் செயல்படுபவன் வெற்றி அடைவான்.


25. கெட்ட பழக்கம் முதலில் வழிப்போக்கனைப் போல வரும்; பிறகு விருந்தாளியாய் மாறி,
முடிவில் முதலாளியாகி விடும்.


26. மறந்து விடாதீர்கள், உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தின் ஒரு பக்கமாகும்.


27. அடகு வைப்பதை விட விற்று விடுவதே மேல்.


28. அதிக நேரம் தூங்கும் சோம்பேறியை எழுப்ப சூரியன் இரு முறை உதிப்பதில்லை.


29. ஓர் ஆற்றைப் படகில் கடப்பதை விட நீந்திக் கடப்பது நல்லது. படகோட்டியைத்
தேட வேண்டியிருக்காது.


30. குதூகலமாக ஒரு வேலையைச் செய்யும் போது, வெற்றி கிடைக்காமல் போவதற்கு
வாய்ப்பே இல்லை.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, October 29, 2009

முல்லா ஏன் அழுதார்?




முல்லா ஏன் அழுதார்?


முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.


அவரது நண்பர் கேட்டார்: "முல்லா, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: " பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு  எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்"
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.


-சிரி(ப்புக் கலை)ஞர் மதன்பாபு சிரித்துக்கொண்டே ஆதித்யா ட்டீ.வி.யில் சொல்லிய கதை. (நன்றி)


:- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, October 27, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 1)







1. கொஞ்சம் பசி இருக்கும்போதே சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.


2. பெரும் பலமுடையவன் அதை மெதுவாக உபயோகித்து வெற்றி பெற வேண்டும்.


3. மூட நம்பிக்கை மனதை விஷமாக்குகிறது.


4. சோம்பேறி மூச்சு விடுகிறான்; ஆனால், வாழவில்லை.


5. சிக்கனம் இருந்தால் மற்ற பண்புகள் அனைத்தும் எளிதில் வந்து விடும்.


6. சீக்கிரமாய் கொடுப்பவன் இரட்டிப்பாய் கொடுத்தவனாகிறான்.


7. உறுதியின்மையால் நல்ல வாய்ப்புகள் பல நழுவி விடுகின்றன. எப்போதும் மன உறுதியுடன் இருங்கள்.


8. முயற்சி செய்கிற வரையில் எவருக்கும் தம் திறமை பற்றி ஒன்றும் தெரியாது.


9. நீங்கள் அமைதியாய் வாழ விரும்பினால் கேளுங்கள்; பாருங்கள்; மௌனமாயிருங்கள்.


10. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்க
வேண்டாம். எது இல்லாமல் வாழ முடியாதோ,
அதை மட்டும் வாங்கினால் போதும்.


11. பொய் எப்போதும் எச்சரிக்கையாய் ஆயுதங்களுடன் இருந்தாலும், முடிவில் தோல்வி அதற்குத்தான்.


12. எது நன்மை என்பதை அதை இழந்தால்தான் தெரியும்.


13. அறிவுள்ளவன் மூடனுக்கும் காளை மாட்டுக்கும் வழி விட்டு ஒதுங்கிச் செல்வான்.


14. சில நிமிடங்கள் மௌனமாயிருங்கள்; கோபம் தணிந்து விடும்.


15. கண்ணியமானவன் என்றால், அவன் யாருக்கும் துன்பம் ஏற்படுத்தாதவன் என்று பொருள்.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.


**அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, October 25, 2009

சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?




சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?

நமது தமிழ்நாட்டுக்காரர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்
ஏற வந்தார். கொண்டுவந்த பெட்டியின் கணம் தாங்காமல்
அவைகளை ரயிலில் ஏற்ற சிரமப்பட்டார். அப்போது
அங்கு நின்றுகொண்டிருந்த சர்தார்ஜி, அவைகளை ஒரு
கையால் அனாயாசமாகத் தூக்கி ரயில் கம்பார்ட்மெண்ட்
உள்ளே எடுத்து வைத்தார்.

நன்றி சொன்னார் தமிழர்.

அதற்கு, "சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொல்லி, கைகளை
தோளுக்குமேல் தூக்கிக்காட்டி பெருமைப்பட்டுக்
கொண்டார் சர்தார்ஜி. (சர்தார்ஜிக்கு தமிழ் தெரியும்
போலிருக்கிறது.)

உள்ளே சென்று பெட்டிகளை மேலே லக்கேஜ் கேபினில்
வைக்க சிரமத்துடன் முற்பட்டார் தமிழர்.

அப்போதும் சர்தார்ஜியே அவற்றை லக்கேஜ் கேபினில்
வைத்துவிட்டு, கைகளை தோளுக்குமேலாகத் தூக்கி,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொன்னார்.

ஜன்னல் ஷட்டர், கன்ணாடியை மேலேதூக்க
சிரமப்பட்டபோதும் சர்தார்ஜியே தூக்கிவிட்டு,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலை செய்யும்" என்று சொன்னார்.

தமிழர் எரிச்சலாகிவிட்டாலும் அமைதியாய்
இருந்துவிட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது.
இருவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் சென்றபின்னர் தமிழர் எழுந்து ரயிலில்
உள்ள அபாயச் சங்கிலியை கையால்
பிடித்துக்கொண்டு, கஷ்டப்படுவதுபோல்
முகத்தை வைத்துக்கொண்டு, இழுப்பதுபோல்
பாவனை செய்தார்.

உடனே சர்தார்ஜி அவசரமாக எழுந்து சங்கிலியை
பலமாக இழுத்தார்; ரயில் நின்றுவிட்டது. ரயில்வே
அதிகாரிகள் வந்துவிட்டார்கள். தமிழர் தமக்கு
எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

தேவையின்றி சங்கிலியை இழுத்து ரயிலை
நிறுத்தியதற்காக சர்தார்ஜியிடம் அபராதத்
தொகையை வசூலித்துக்கொண்டு சென்றார்கள்
அதிகாரிகள். அனைத்தையும் அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தமிழர் சொன்னார்:

"அரிசிச் சோறு சாப்பிடு. மூளை பலமாகும்; அறிவு நல்லா
வேலைசெய்யும்."

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 23, 2009

காமனுக்கு காமன் (பாடல்)



காமனுக்கு காமன் (பாடல்)


இந்தப் பாடல் கமல் இரசிகர்களுக்கு
ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் இந்தப்
பாடலுக்கு ஆடியவர் கமல்தான்.
படம்: உருவங்கள் மாறுவதில்லை.

இந்தப் பாடலின் கருத்துக்களை
அனைவரும் அறிந்துகொள்ளவே
இந்த இடுகை.
பாடியவர்: திரு.எஸ்.ப்பீ.பாலசுப்ரமணியன்.

இதோ அந்தப் பாடல்:

காமனுக்குக் காமன் மாமனுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
கனவில் நினைவில் எதிலும் இவன்...
கனவில் நினைவில் எதிலும் இவன்
கவிதை அழகின் இரசிகன் இவன்
காலை மாலை இல்லை நான் கொஞ்ச
காமனுக்குக் காமன்...............

ஆடலோடு பாடலும் மோகம் கொண்ட கண்களும்
காதல் கொண்ட ஜோடிகள் மேடைமீது ஆடவும்
ஆடலோடு பாடலும் மோகம் கொண்ட கண்களும்
காதல் கொண்ட ஜோடிகள் மேடைமீது ஆடவும்
தைதைதை தாளங்கள் தட்டட்டும்
தோம்தோம்தோம் மேளங்கள் கொட்டட்டும்
தைதைதை தாளங்கள் தட்டட்டும்
தோம்தோம்தோம் மேளங்கள் கொட்டட்டும்
தாம்தக தீம்தக தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தாம்தக தீம்தக தரிகிட தரிகிட தரிகிட தோம்
காமனுக்குக் காமன்....

ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
இந்த சாமிகிட்ட கத்துக்கணும் சகலம்.
ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
இந்த சாமிகிட்ட கத்துக்கணும் சகலம்.
அம்மாடி தாங்காதடி - நீ
தந்தாலும் தீராதடி
அம்மாடி தாங்காதடி - நீ
தந்தாலும் தீராதடி

சவாலங்கடி கிரிகிரி
சைதாப்பேட்டை வடகறி
உட்டாம்பாரு ஜாங்கிரி
சோன்பப்டி நைனா மைனா

சவாலங்காடி கிரிகிரிகிரி
சைதாப்பேட்டை வடகறிகறி
உட்டாம்பாரு ஜாங்கிரிகிரி
சோன்பப்டி நைனா மைனா

ஏ... சவாலங்கிடி,
ஏ... சைதாப்பேட்டை,
ஏ... உட்டாம்பாரு,
ஏ... சோன்பப்டி

தைதைதை தகிட தகிட
தைதைதை தைதோம்
தைதைதை தகிட தகிட
தைதைதை தைதோம்தொம்.

இந்தப் பாடலின் கருத்துக்கள் பற்றிய
உங்கள் அபிப்ராயங்களை எழுதுங்கள்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, October 21, 2009

நகைச்சுவை இரசித்தவை - 7





நகைச்சுவை இரசித்தவை - 7




வீட்டு உரிமையாளர்: "உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா?"

வாடகை வீடு பார்ப்பவர்: "இன்னும்
இல்ல சார்"

வீ.உரிமையாளர்: இன்னும் ஆகலையா?"

வா.வீ.பார்ப்பவர்: "கலியாணம் ஆயிடுச்சி
சார்"

வீ.உரிமையாளர்: "என்ன சார் மாத்தி, மாத்தி
சொல்றீங்க?"

வா.வீ.பார்ப்பவர்: "சார், எனக்கு ரொம்ப
ஞாபக சக்திங்க. எனக்கு சின்ன வயசில
கலியாணம் ஆகலை இல்லையா, அந்த
ஞாபகத்திலயே சொல்லிட்டேன்"

(நன்றி: எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

முதல் வக்கீல்: நான் ஒரு புனை பெயர்
வச்சிக்கிட்டிருக்கேன்.

மற்ற வக்கீல்: என்னன்னு?

முதல் வக்கீல்: "மியாவ்"

மற்ற வக்கீல்: இது புனை பெயர் மாதிரி
இல்லையே, பூனை பெயர் மாதிரில்ல
இருக்கு?

(நன்றி : எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒருவர்: எங்க ஊர்ல ரெண்டு கட்சிக்காரங்களுக்கும்
சண்டை, அடிதடி!

மற்றவர்: அப்புறம் என்ன ஆச்சு?

முதலாமவர்: போலீஸ் வந்து எல்லோருக்கும்
தடியடி!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, October 20, 2009

பேரைச் சொல்லவா?




பேரைச் சொல்லவா?



அந்தப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர்
புதிதாய் மாறுதலாகி வந்தார்.
முதல் நாள் மாணவர்களிடம்
பெயர்களை விசாரித்தார்.

முதலில் ஒரு மாணவனிடம்,
"உன் பெயர் என்ன?" என்று
கேட்டார்.

அதற்கு அந்த மாணவன்,
"மாரி" என்றான்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
ஆசிரியர் கேட்டார்.

"மாரியப்பன்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு ஆச்சரியம்.

அடுத்த மாணவனிடம், "உன் பெயர்
என்ன?" என்று கேட்டார்.

"ராஜா" என்றான் மாணவன்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
கேட்டார் ஆசிரியர்.
"ராஜாஃபாதர்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு மிகுந்த அதிர்ச்சியாகி
விட்டது.

மூன்றாவதாக மாணவனிடம் "உன்
அப்பா பெயர் என்ன?" என்று மாற்றிக்
கேட்டார். "அப்பா பெயர் ஜான்"
என்றான் மாணவன்.

"உன் பெயர் என்ன?" என்று கேட்டார்
ஆசிரியர். "ஜான்சன்" என்றான் மாணவன்.

அந்த ஆசிரியர் பிறகு மாணவர்களிடம்
பெயர் கேட்பதையே விட்டு விட்டார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 16, 2009

தீபாவளியும் பாதுகாப்பும்!




தீபாவளியும் பாதுகாப்பும்!

பட்டாசுக்கள் கொளுத்தும்போது காயம்
ஏற்பட்டு அதனால் தீபாவளியின் மகிழ்ச்சியை
இழக்கச் செய்யலாமா?

தீபாவளி அன்று பட்டாசு கொளுத்தும்போது
கடை பிடித்திட வேண்டிய சில பாதுகாப்பு
முறைகள் பற்றி 'நம்ம ஊரு செய்தி'
நவம்பர் 2002 இதழில் சில குறிப்புக்கள்
படித்தேன். இந்தி ஆசிரியர் திரு.ஆர்.
சுவாமிநாதன் தொகுத்தவை. அவை:

*பட்டாசுக்களை ஒரே இடத்தில் அதிகமாக
குவித்து வைக்கக்கூடாது.

*குழந்தைகள் எடுக்கும் வகையில்
பட்டாசுக்களை வைக்ககூடாது.

*உற்பத்தியாளர் பெயர் அச்சிடப்படாத
பட்டாசுக்கள் உள்ள பெட்டியை
வாங்கக்கூடாது.

*பட்டாசுக்கள் வெடிக்கும்போது தொளதொள
மற்றும் எளிதில் தீப்பற்றும் உடைகள்
அணியக்கூடாது.

*சரவெடியை நெருக்கமான தெருக்களிலோ,
மாடி குடியிருப்புக்களின் மத்தியிலோ
வெடிக்கக்கூடாது.

*கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள்,
முதியவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு
செய்யாமல் பட்டாசுக்கள் வெடிக்க
வேண்டும்.

*கொளுத்திய பட்டாசுக்களை ஒருவரை
நோக்கிக் காட்டுவதோ, தெருவில்
எறிவதோ கூடாது.

*தீக்குச்சிகள் மூலம் வெடிகள்
கொளுத்தக் கூடாது.

*பட்டாசு கொளுத்தும்போது கவனத்தை
வேறு விஷயங்களில் செலுத்தாதீர்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரையோ
அல்லது ஐஸ் கட்டிகளையோ வைத்து
முதல் உதவி செய்யவேண்டும்.

இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை
கவனத்தில் கொண்டு சிறப்புடன் தீபாவளி
கொண்டாடுங்கள். குழந்தைகள் பட்டாசு
கொளுத்தும்போது பெரியவர்கள்
மேற்பார்வை செய்துகொள்ளுங்கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...