...பல்சுவை பக்கம்!

.

Friday, May 29, 2020

சின்னப் பயலே! சின்னப் பயலே!! #141



சின்னப் பயலே! சின்னப் பயலே!! - கவிதை


தம்பிப் பயலே சின்னப் பயலே
நல்லா கேட்டுக்கோ!

அம்மா அப்பா சொல்லுற
பேச்சு கேட்டு நடந்துக்கோ!

அறிவு வளர வாழ்வு
உயர நல்லா படிச்சிக்கோ!

பெரியோர் அறிஞர் சான்றோர் அறிவுரை மதிச்சி நடந்துக்கோ!

அதிகாலை எழுந்து பாடங்கள் படித்து மனசுல பதிச்சிக்கோ!

அம்மாவுக்கு வீட்டு வேலைகள் உதவிகள் செய்து பழகிக்கோ!

இயலாதோர்க்கு உதவிகள் செய்து பண்பை வளத்துக்கோ!

பெரியோர் நமக்கு வழிகாட்டி ஆகவே அவர்வழி நடந்துக்கோ!

எளியோர் சுற்றம் நட்பு நாடு என்றும் விரும்பிக்கோ!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, February 8, 2020

அன்பே! தேவதையே! #140

'தமிழக எழுத்தாளர்கள்'
என்கிற வாட்ஸ்ஆப் குழுமத்தில் 12/01/2020-ல் நடந்த போட்டிக்கு நான் எழுதிய கடிதம்!

கடிதம் எழுதும் போட்டி!

கடிதம் எழுதுவதை எல்லோரும் நிறையவே மிஸ் செய்துவிட்டோம். அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு போட்டி.

யாருக்கு எழுதவேண்டும்?

நாம் அதிகம் யாருக்கு எழுத ஆசைபடுவோம்?

அதே!

அதேதான்!!

உங்கள் மனம் கவர்ந்த காதலிக்கு எழுதுங்கள்!!"

கடிதம் ஒருபக்கக் கதை அளவு இருக்கலாம்.

கடிதத்தில் 'அட்சதை', 'ஜன்னல் நிலா', 'இளவட்டக்கல்', 'கரும்பு' ,
'ச்சீ போடா...' ஆகிய வார்த்தைகள் எங்காவது கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.

இந்த விதிமுறைகளுக்குட்பட்டு நான் எழுதிய (கற்பனைக்) கடிதம் இதோ!

***+++***+++***

அன்பே! தேவதையே!

நாம் கூடி கொஞ்சி குலாவும்போது
'கரும்பு' போல் இனித்தாய்!

நான் குறும்புகள் செய்யும்போது,
'ச்சீ போடா' என செல்லக் கோபம் கொப்பளிக்கச் சொல்வாய்!

அப்படி சொல்லும் உன் வாயைப் பிடிக்க நான் முனையும்போது,
எழுந்து ஓடுவாய்!

அப்படி ஒருநாள் ஓடும்போது, கல்லில் காலை இடித்துக் கொண்டாய்!

கோபம் கொண்ட நான், அந்த 'இளவட்டக்கல்'-லை ஓரமாய் தூக்கி எறிந்தபோது மலைப்பாய் பார்த்தாய்!

ஆனால் இறுதியில்,
உறவினர் 'அட்சதை' தூவிட
யாருக்கோ மனைவியானாய்!

இங்கே நான் 'ஜன்னல் நிலா'-வைப் பார்த்துக் கொண்டும்
'எங்கிருந்தாலும் வாழ்க!' எனப் பாடிக் கொண்டும் சோகத்தில் வாடிக் கொண்டும் இருக்கிறேன்
உண்மையான காதலோடு(ம்)!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, December 1, 2019

தொல்லைப்பேசி -சிறுகதை #139


'தமிழக எழுத்தாளர் குழுமம்' நடத்திய 'படத்திற்கேற்ற கதை போட்டி'-க்காக எழுதப்பட்ட கதை இது!

தொல்லைபேசி!
- ஒரு பக்கக் கதை!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

  பவானி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

  "அந்தக் காலத்தில வெளியூரில் இருப்பவர்களுக்கு செய்தியை சொல்ல, தபால்தான் இருந்தது. அதற்குப் பின்னால, மொபைல் ஃபோன் அந்த இடத்தை பிடித்தது. இப்ப அந்த ஃபோன், நம்ம வாழ்க்கையிலே, நம்மளுடைய அதிகபட்ச நேரத்தையே
பிடிச்சிக்கிட்டது துரதிர்ஷ்டவசமானது.
 
  "நீண்ட நேரம் ஃபோனிலேயே நாம இருக்கிறதாலே நம்முடைய உழைக்கும் திறன் குறைஞ்சிட்டே வருது. இரவு நேரத்திலும் ஃபோன் பயன்பாட்டினால், தூக்கத்தை தூண்டுற சுரப்பிகள் உற்பத்தி குறையுது.

   "அதனால, பல உடல் நலக் கேடுகள், ஃபோனுக்கு அடிமையாகிற பரிதாபம்லாம் ஏற்படுது.

   "உங்க வீடுகள்ல, சிறு குழந்தைகளுக்கு அழுதால், ஃபோன் கொடுக்காமல், கிளுகிளுப்பை கொடுத்து பழக்கப்படுத்துங்க! ஃபோனை, தூரமா வச்சிட்டு, அவங்களோட தாயம், பல்லாங்கழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம்னு நீங்களும் சேர்ந்து விளையாடுங்க! சிறுவர்களுக்கு, கபடி, கிட்டிப் புல், கிரிக்கெட், ஆபியம், கோலி குண்டு, கேரம், சதுரங்கம்னு விளையாட ஊக்கப்படுத்துங்க! ஃபோனில் விளையாடாதீங்க! அரட்டை அடிக்காதீங்க! தேவையானதை பேசுங்க!

   "வாட்ஸ்ஆப்ல இருந்தா, அதையே திரும்ப திரும்ப பார்க்காம, 1 மணி நேரத்துக்கு இல்லனா அரை மணி நேரத்துக்கு ஒரு முறை போய் பார்த்தீங்கனா, எல்லா மெசேஜ்-ஐயும் படிச்சிடலாம்; உடனே அழிச்சிடலாம்!
டேட்டா இலவசமா கிடைக்குதுனு, அதுக்கு பதிலா நம்ம நேரத்தை அதுல செலவழிச்சிடாமல், உபயோகமா பயன்படுத்திக்குங்க! நன்றி!!" என்று பேச்சை முடித்தாள் பவானி.

   மறுநாள், சனிக்கிழமை பவானி அவளுடைய சிறிய பெட்டிக் கடையைத் திறந்து வியாபாரம் செய்யும்போது வந்தான் சிறுவன் தாமரைச்செல்வன்.

   "அக்கா, எங்க அம்மா சென்னாங்க, ஃபோனில் விளையாடாமல், தெருவில விளையாட சொன்னீங்களாம்! அதனால, இந்த நம்பருக்கு நெட் பேக் போட வேண்னாம்; டாக் டைம் மட்டும் டாப்-அப் பண்ணிவிடுங்க!"
என்றான் அவன்.

   அதைக் கேட்ட பவானிக்கு, 'வருமானம்' குறைந்தது; அவளின் 'பெருமனம்' நிறைந்தது!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, November 23, 2019

'அம்மா சொன்ன கதை', தேன்சிட்டு இதழில்! #138

இம்மாத (நவம்பர் 2019) தீபாவளி சிறப்பிதழ், 'தேன்சிட்டு' இதழில் நான் எழுதிய, "அம்மா சொன்ன கதை" பிரசுரம் ஆகியுள்ளது!

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, November 17, 2019

படக் கவிதைப் போட்டி #137

வெற்றிமகள் - படக் கவிதைப் போட்டி


தமிழக எழுத்தாளர்கள் குழுமம் நடத்திய, படத்திற்கேற்ற கவிதை போட்டியில் எனது கவிதையும் வெற்றி பெற்றது!

படக்கவிதைப் போட்டி! 

*வெற்றிமகள்!*

துள்ளலோடு செல்லும் பாப்பா! துவண்டுவிடாதே!

துன்பம்துயர் வரும்போது மிரண்டுவிடாதே!

எதிர்படும் விஷயமெல்லாம் தீய சக்தி! எதிர்க்கட்டும் அவற்றை உன் எதிர்சக்தி!

சுமைகள் வந்தால் சுட்டுத் தள்ளு! அலட்சியம் செய்தால் விட்டுத் தள்ளு!

நன்மைகள் வரட்டும் நாட்டம் கொள்ளு! நானிலத்தில் நீயே வென்று நில்லு!
   -அ.முஹம்மது நிஜாமுத்தீன், நீடூர் 609203.



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, October 6, 2019

கேள்வி பதில் - முஸ்லிம் முரசு & குமுதம் #136

'முஸ்லிம் முரசு' இதழில் வெளிவந்த எனது கேள்வி 'குமுதம்' இதழில் மறுபிரசுரம் ஆனது!

இதுதான் அது!!

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, June 22, 2019

என்கதையா? உன்கதையா? #135

என் கதையா? உன் கதையா?

01/02/2017 குமுதம் இதழில் 'பிக்பாக்கெட்' என்ற தலைப்பில் நான் எழுதிய 'ஹலோ வாசகாஸ்' படைப்பு வெளியானது.

 08/05/2019 குமுதம் இதழில் 'அயன்புரம்  த. சத்தியநாராயணன்' எழுதிய,
'குழந்தை' ஒரு பக்கக் கதை வெளிவந்துள்ளது.
...
இரு படைப்புகளிலும் சில அம்சங்கள் ஒத்துப்போகின்றன.
1. அதே பயணம் (பஸ், ரயில்)!
2. அதே குழந்தை!
3. அதே குழந்தை உடம்பில் தங்க நகைகள்!
4. அதே 'நம்மீது சந்தேகப்படுவார்களோ' என்கிற முன்னெச்சரிக்கை!

அதே #குமுதம்

எனது அனுபவக் கதை:


சத்தியநாராயணன் எழுதியது இது:


-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

திருமண வாழ்த்து #134

திருமண வாழ்த்து #134

எனது நண்பன் க.சந்தானகிருஷ்ணன்  திருமணத்திற்காக, நான் எழுதிய வாழ்த்துப்பாடலை இங்கே பதிகிறேன்.

இப்பாடலின் மெட்டு: "பறக்கும் பறவைகள் நீயே!"
திரைப்படம்: கவிதா.
இதோ அந்தப் பாடல்:


இதுதான் நான் எழுதிய பாடல்:


அன்புக்கு நண்பன் நீயே !
பண்புக்கு விளக்கம் நீயே !
உண்மைக்கு உதாரணம் நீயே!
நன்மைக்கு நாயகன் நீயே !

சந்தானம் பெயர் கொண்டு விட்டாயே!
சந்தனம் மணம் நீயும் தந்திடுவாயே !
தந்தத்தின் மதிப்பு பெற்று விட்டாயே!
மாந்தரின் மாணிக்கம் போல வந்தாயே !

குணமகள் மணமகள் குண சுந்தரியே !
குன்றினில் விளக்கே ஒளி தருவாயே !
இல்லறம் வாழ்வில் இனித்திட நீயே !
நல்லறம் புரிந்து நனி செய்வாயே !

வளமாற நீவிர் வாழ்ந்திட என்று,
உளமாற நாங்கள் வாழ்த்திட நன்று !
இருவரும் இணைந்து இன்பத்தைப் பெறவே,
இறைவா நீயும் அருள் புரிவாயே !

- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...