...பல்சுவை பக்கம்!

.

Sunday, October 25, 2009

சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?




சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?

நமது தமிழ்நாட்டுக்காரர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்
ஏற வந்தார். கொண்டுவந்த பெட்டியின் கணம் தாங்காமல்
அவைகளை ரயிலில் ஏற்ற சிரமப்பட்டார். அப்போது
அங்கு நின்றுகொண்டிருந்த சர்தார்ஜி, அவைகளை ஒரு
கையால் அனாயாசமாகத் தூக்கி ரயில் கம்பார்ட்மெண்ட்
உள்ளே எடுத்து வைத்தார்.

நன்றி சொன்னார் தமிழர்.

அதற்கு, "சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொல்லி, கைகளை
தோளுக்குமேல் தூக்கிக்காட்டி பெருமைப்பட்டுக்
கொண்டார் சர்தார்ஜி. (சர்தார்ஜிக்கு தமிழ் தெரியும்
போலிருக்கிறது.)

உள்ளே சென்று பெட்டிகளை மேலே லக்கேஜ் கேபினில்
வைக்க சிரமத்துடன் முற்பட்டார் தமிழர்.

அப்போதும் சர்தார்ஜியே அவற்றை லக்கேஜ் கேபினில்
வைத்துவிட்டு, கைகளை தோளுக்குமேலாகத் தூக்கி,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொன்னார்.

ஜன்னல் ஷட்டர், கன்ணாடியை மேலேதூக்க
சிரமப்பட்டபோதும் சர்தார்ஜியே தூக்கிவிட்டு,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலை செய்யும்" என்று சொன்னார்.

தமிழர் எரிச்சலாகிவிட்டாலும் அமைதியாய்
இருந்துவிட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது.
இருவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் சென்றபின்னர் தமிழர் எழுந்து ரயிலில்
உள்ள அபாயச் சங்கிலியை கையால்
பிடித்துக்கொண்டு, கஷ்டப்படுவதுபோல்
முகத்தை வைத்துக்கொண்டு, இழுப்பதுபோல்
பாவனை செய்தார்.

உடனே சர்தார்ஜி அவசரமாக எழுந்து சங்கிலியை
பலமாக இழுத்தார்; ரயில் நின்றுவிட்டது. ரயில்வே
அதிகாரிகள் வந்துவிட்டார்கள். தமிழர் தமக்கு
எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

தேவையின்றி சங்கிலியை இழுத்து ரயிலை
நிறுத்தியதற்காக சர்தார்ஜியிடம் அபராதத்
தொகையை வசூலித்துக்கொண்டு சென்றார்கள்
அதிகாரிகள். அனைத்தையும் அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தமிழர் சொன்னார்:

"அரிசிச் சோறு சாப்பிடு. மூளை பலமாகும்; அறிவு நல்லா
வேலைசெய்யும்."

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 23, 2009

காமனுக்கு காமன் (பாடல்)



காமனுக்கு காமன் (பாடல்)


இந்தப் பாடல் கமல் இரசிகர்களுக்கு
ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் இந்தப்
பாடலுக்கு ஆடியவர் கமல்தான்.
படம்: உருவங்கள் மாறுவதில்லை.

இந்தப் பாடலின் கருத்துக்களை
அனைவரும் அறிந்துகொள்ளவே
இந்த இடுகை.
பாடியவர்: திரு.எஸ்.ப்பீ.பாலசுப்ரமணியன்.

இதோ அந்தப் பாடல்:

காமனுக்குக் காமன் மாமனுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
கனவில் நினைவில் எதிலும் இவன்...
கனவில் நினைவில் எதிலும் இவன்
கவிதை அழகின் இரசிகன் இவன்
காலை மாலை இல்லை நான் கொஞ்ச
காமனுக்குக் காமன்...............

ஆடலோடு பாடலும் மோகம் கொண்ட கண்களும்
காதல் கொண்ட ஜோடிகள் மேடைமீது ஆடவும்
ஆடலோடு பாடலும் மோகம் கொண்ட கண்களும்
காதல் கொண்ட ஜோடிகள் மேடைமீது ஆடவும்
தைதைதை தாளங்கள் தட்டட்டும்
தோம்தோம்தோம் மேளங்கள் கொட்டட்டும்
தைதைதை தாளங்கள் தட்டட்டும்
தோம்தோம்தோம் மேளங்கள் கொட்டட்டும்
தாம்தக தீம்தக தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தாம்தக தீம்தக தரிகிட தரிகிட தரிகிட தோம்
காமனுக்குக் காமன்....

ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
இந்த சாமிகிட்ட கத்துக்கணும் சகலம்.
ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
இந்த சாமிகிட்ட கத்துக்கணும் சகலம்.
அம்மாடி தாங்காதடி - நீ
தந்தாலும் தீராதடி
அம்மாடி தாங்காதடி - நீ
தந்தாலும் தீராதடி

சவாலங்கடி கிரிகிரி
சைதாப்பேட்டை வடகறி
உட்டாம்பாரு ஜாங்கிரி
சோன்பப்டி நைனா மைனா

சவாலங்காடி கிரிகிரிகிரி
சைதாப்பேட்டை வடகறிகறி
உட்டாம்பாரு ஜாங்கிரிகிரி
சோன்பப்டி நைனா மைனா

ஏ... சவாலங்கிடி,
ஏ... சைதாப்பேட்டை,
ஏ... உட்டாம்பாரு,
ஏ... சோன்பப்டி

தைதைதை தகிட தகிட
தைதைதை தைதோம்
தைதைதை தகிட தகிட
தைதைதை தைதோம்தொம்.

இந்தப் பாடலின் கருத்துக்கள் பற்றிய
உங்கள் அபிப்ராயங்களை எழுதுங்கள்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, October 21, 2009

நகைச்சுவை இரசித்தவை - 7





நகைச்சுவை இரசித்தவை - 7




வீட்டு உரிமையாளர்: "உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா?"

வாடகை வீடு பார்ப்பவர்: "இன்னும்
இல்ல சார்"

வீ.உரிமையாளர்: இன்னும் ஆகலையா?"

வா.வீ.பார்ப்பவர்: "கலியாணம் ஆயிடுச்சி
சார்"

வீ.உரிமையாளர்: "என்ன சார் மாத்தி, மாத்தி
சொல்றீங்க?"

வா.வீ.பார்ப்பவர்: "சார், எனக்கு ரொம்ப
ஞாபக சக்திங்க. எனக்கு சின்ன வயசில
கலியாணம் ஆகலை இல்லையா, அந்த
ஞாபகத்திலயே சொல்லிட்டேன்"

(நன்றி: எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

முதல் வக்கீல்: நான் ஒரு புனை பெயர்
வச்சிக்கிட்டிருக்கேன்.

மற்ற வக்கீல்: என்னன்னு?

முதல் வக்கீல்: "மியாவ்"

மற்ற வக்கீல்: இது புனை பெயர் மாதிரி
இல்லையே, பூனை பெயர் மாதிரில்ல
இருக்கு?

(நன்றி : எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒருவர்: எங்க ஊர்ல ரெண்டு கட்சிக்காரங்களுக்கும்
சண்டை, அடிதடி!

மற்றவர்: அப்புறம் என்ன ஆச்சு?

முதலாமவர்: போலீஸ் வந்து எல்லோருக்கும்
தடியடி!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, October 20, 2009

பேரைச் சொல்லவா?




பேரைச் சொல்லவா?



அந்தப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர்
புதிதாய் மாறுதலாகி வந்தார்.
முதல் நாள் மாணவர்களிடம்
பெயர்களை விசாரித்தார்.

முதலில் ஒரு மாணவனிடம்,
"உன் பெயர் என்ன?" என்று
கேட்டார்.

அதற்கு அந்த மாணவன்,
"மாரி" என்றான்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
ஆசிரியர் கேட்டார்.

"மாரியப்பன்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு ஆச்சரியம்.

அடுத்த மாணவனிடம், "உன் பெயர்
என்ன?" என்று கேட்டார்.

"ராஜா" என்றான் மாணவன்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
கேட்டார் ஆசிரியர்.
"ராஜாஃபாதர்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு மிகுந்த அதிர்ச்சியாகி
விட்டது.

மூன்றாவதாக மாணவனிடம் "உன்
அப்பா பெயர் என்ன?" என்று மாற்றிக்
கேட்டார். "அப்பா பெயர் ஜான்"
என்றான் மாணவன்.

"உன் பெயர் என்ன?" என்று கேட்டார்
ஆசிரியர். "ஜான்சன்" என்றான் மாணவன்.

அந்த ஆசிரியர் பிறகு மாணவர்களிடம்
பெயர் கேட்பதையே விட்டு விட்டார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 16, 2009

தீபாவளியும் பாதுகாப்பும்!




தீபாவளியும் பாதுகாப்பும்!

பட்டாசுக்கள் கொளுத்தும்போது காயம்
ஏற்பட்டு அதனால் தீபாவளியின் மகிழ்ச்சியை
இழக்கச் செய்யலாமா?

தீபாவளி அன்று பட்டாசு கொளுத்தும்போது
கடை பிடித்திட வேண்டிய சில பாதுகாப்பு
முறைகள் பற்றி 'நம்ம ஊரு செய்தி'
நவம்பர் 2002 இதழில் சில குறிப்புக்கள்
படித்தேன். இந்தி ஆசிரியர் திரு.ஆர்.
சுவாமிநாதன் தொகுத்தவை. அவை:

*பட்டாசுக்களை ஒரே இடத்தில் அதிகமாக
குவித்து வைக்கக்கூடாது.

*குழந்தைகள் எடுக்கும் வகையில்
பட்டாசுக்களை வைக்ககூடாது.

*உற்பத்தியாளர் பெயர் அச்சிடப்படாத
பட்டாசுக்கள் உள்ள பெட்டியை
வாங்கக்கூடாது.

*பட்டாசுக்கள் வெடிக்கும்போது தொளதொள
மற்றும் எளிதில் தீப்பற்றும் உடைகள்
அணியக்கூடாது.

*சரவெடியை நெருக்கமான தெருக்களிலோ,
மாடி குடியிருப்புக்களின் மத்தியிலோ
வெடிக்கக்கூடாது.

*கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள்,
முதியவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு
செய்யாமல் பட்டாசுக்கள் வெடிக்க
வேண்டும்.

*கொளுத்திய பட்டாசுக்களை ஒருவரை
நோக்கிக் காட்டுவதோ, தெருவில்
எறிவதோ கூடாது.

*தீக்குச்சிகள் மூலம் வெடிகள்
கொளுத்தக் கூடாது.

*பட்டாசு கொளுத்தும்போது கவனத்தை
வேறு விஷயங்களில் செலுத்தாதீர்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரையோ
அல்லது ஐஸ் கட்டிகளையோ வைத்து
முதல் உதவி செய்யவேண்டும்.

இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை
கவனத்தில் கொண்டு சிறப்புடன் தீபாவளி
கொண்டாடுங்கள். குழந்தைகள் பட்டாசு
கொளுத்தும்போது பெரியவர்கள்
மேற்பார்வை செய்துகொள்ளுங்கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, October 12, 2009

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (நகைச்சுவை)



ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர்
================================
ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர் ஹிட்லர்.
'யூதர்கள்தான் தம் நாட்டைச் சுரண்டியவர்கள்; அவர்களால்தான்
ஜெர்மானியர்கள் வறுமையில் வாடுகின்றனர்' என்ற எண்ணம்
கொண்டிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான யூத இன
மக்களை விஷவாயு அறைகளில் அடைத்து மிகக்
கோரமாகக் கொன்றவர்.

அவருக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒரு
சமயம் பெரிய ஜோதிட வல்லுனர் ஒருவரை
அழைத்து வரச் சொன்னார் ஹிட்லர்.
அவரிடம், "என் ஆயுட்காலம் எப்போது முடிகிறது? நான்
எப்போது சாவேன்?" எனக் கேட்டார். ஹிட்லரின்
ஜாதகத்தை மிகத் தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர்,
"யூதர்களின் பண்டிகையன்று நீங்கள் இறப்பீர்கள்.."
என்று சொன்னார்.

ஜோதிடரின் பதிலைக் கேட்ட ஹிட்லர்,
"யூதர்களுக்குத்தான் வருடம் முழுதும் பல
பண்டிகைகள் வருகின்றனவே... எந்தப்
பண்டிகையின்போது நான் இறப்பேன் என்பதைச்
சரியாகச் சொல்லுங்கள்" என்றார்.

"நீங்கள் என்றைக்கு இறக்கிறீர்களோ, அந்த நாள்
யூதர்களின் பண்டிகை நாளாக நிச்சயம்
கொண்டாடப்படும்..." என்றார் ஜோதிடர்.

அதன் பிறகு, அந்த ஜோதிடரின் கதி என்னவாயிற்றோ???

நன்றி: திரு.அந்துமணி - வாரமலர்.
மூலம் ஆங்கில நூல்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

'ஆசப்பட்ட எல்லாத்தையும்' (பாடல்)

நாட்டுப்புறப் பாடகர் சின்னப்பொண்ணு அவர்கள் எழுதி
பலகாலமாக மேடைகளில் பாடிவரும் பாடல். பின்னாளில்
திரைப்படத்திலும் இது இடம்பெற்றது. திரையில்
இப்பாடலைப் பாடியவர் பாடகர் திரு.ஹரிஹரன்.

ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?
ஆயிரம் உறவு உன்ன தேடிவந்தே நின்னாலும்
தாய்போல காணமுடியுமா- நீயும்
தாய்போல காணமுடியுமா?
உனக்கும் எனக்கும் அம்மா ஒருத்திதானடா- தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?

எளவட்டமானாலும் எண்ண தேச்சி குளிக்கவப்பா
எளவட்டமானாலும் எண்ண தேச்சி குளிக்கவப்பா
ஏமாத்து புள்ளய நம்பி இதயத்த பறிகொடுப்பா
ஏமாத்து புள்ளய நம்பி இதயத்த பறிகொடுப்பா
கட்டெறும்பு உன்ன கடிச்சா கத்திக்கிட்டு அவ முழிப்பா
கட்டெறும்பு உன்ன கடிச்சா கத்திக்கிட்டு அவ முழிப்பா
பெத்தவளுக்கே கைமாறுதான் புள்ள என்ன கொடுத்துவப்பான்?
பெத்தவ்ளுக்கே கைமாறுதான் புள்ள என்ன கொடுத்துவப்பான்?
உனக்கும் எனக்கும் அம்மா ஒருத்திதானடா- தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?

பட்டினியாக் கிடந்தாலும் பிள்ளக்கி பால் கொடுப்பா
பட்டினியாக் கிடந்தாலும் பிள்ளக்கி பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளைமுகம் பாத்து பசி மறப்பா
பால் குடிக்கும் பிள்ளைமுகம் பாத்து பசி மறப்பா
நெஞ்சிலே நடக்க வப்பா நெலாவப் பிடிக்க வப்பா
நெஞ்சிலே நடக்க வப்பா நெலாவப் பிடிக்க வப்பா
பிஞ்சி விரலில் நகம் கடிப்பா பேசச் சொல்லி ரசிச்சிருப்பா
பிஞ்சி விரலில் நகம் கடிப்பா பேசச் சொல்லி ரசிச்சிருப்பா
உனக்கும் எனக்கும் அம்மா ஒருத்திதானடா- தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, October 7, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 6






ஆசிரியர்: கோபால், அஞ்சும் மூனும்
எவ்வளவு?

கோபால்: ம்..ம்.. வந்து.. ஏழு சார்.

ஆசிரியர்: என்ன ஏழா? எப்படி
கூட்டினாலும் வராதேடா?

கோபால்: தப்பாக் கூட்டினால் வரும்
சார்!!!

#######################################

தாத்தா: டேய் கோ..வாலு! என்னோட
கண்ணாடியக் காணோம்; கண்ணு
தெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம்
தேடி எடுத்துக் கொடுடா.

கோபால்: போ தாத்தா, எனக்கு
வேலை இருக்கு. நீயே கண்ணாடியப்
போட்டுக்கிட்டு தேடி எடுத்துக்கோ!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தலைமையாசிரியர்: (பள்ளி ஆண்டு
விழாவில்) : பள்ளிக்கு தினமும்
லேட்டா வந்தாலும், முன் சொன்ன
காரணத்தையே மறுமுறையும் சொல்லாமல்
தினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்
சொன்ன வர(ரா)தராஜனுக்கு இந்த
சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.

!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...